Singapore Saloon Collection: சிங்கப்பூர் சலூன் நடத்தி ஜெயித்தாரா ஆர்.ஜே.பாலாஜி - படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapore Saloon Collection: சிங்கப்பூர் சலூன் நடத்தி ஜெயித்தாரா ஆர்.ஜே.பாலாஜி - படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

Singapore Saloon Collection: சிங்கப்பூர் சலூன் நடத்தி ஜெயித்தாரா ஆர்.ஜே.பாலாஜி - படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 02:23 PM IST

சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வசூல் நிலவரம்
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வசூல் நிலவரம்

 ஆர்.ஜே.பாலாஜி, நடிகை மீனாட்சி செளத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன்  திரைப்படம் நேற்று ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை ‘’இதற்குத்தானாய் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரெளத்திரம்'' ஆகியப் படங்களை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார். Sacnilk.com அறிக்கையின்படி, சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் இந்தியாவில் ரூ. 1 கோடி சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 2ஆவது நாளான இன்றைய நண்பகல் ஒரு மணி நிலவரப்படி, 0.38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 

ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை முதல் நாளில், திரையரங்குகளில் 19.26 விழுக்காடு தமிழர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதிகபட்சமாக பாண்டிச்சேரியில் 42.5 விழுக்காடு பார்வையாளர்கள் இப்படத்தைப் பார்த்துள்ளனர். காலை காட்சிகளில் 13.24 விழுக்காடும், நண்பகல், மாலை மற்றும் இரவு காட்சிகளில் முறையே 18.54 விழுக்காடு, 18.38 விழுக்காடு மற்றும் 26.89 விழுக்காடு பார்வையாளர்கள் இருந்தனர்.

சிங்கப்பூர் சலூன்: 

சிங்கப்பூர் சலூன் ஒரு இளம் சிகை அலங்கார நிபுணரைப் பற்றிய வெற்றிக்கதை ஆகும். தனது கிராமத்தில் ஒரு முடிதிருத்துபவரால் ஈர்க்கப்பட்டு, நிறைய கனவுகளைக் கொண்டிருக்கும் இளைஞர் சிகை அலங்கார ஜெயித்தாரா என்பதை இப்படம் கூறுவதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர், இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளனர். படம் நவம்பர் 2022-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்:   சிங்கப்பூர் சலூன் படம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலம் தளம் எழுதியுள்ள விமர்சனத்தில், "படம் சில புள்ளிகளில் பின்தங்கியுள்ளது மற்றும் கதாநாயகன் சில காரணங்களால் படம் முழுவதும் சோகமாக இருப்பதாகத் தெரிகிறது. படம் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டாமா? ஆர்.ஜே.பாலாஜி சிகை அலங்கார நிபுணராக நன்றாகவும் நம்பத்தகுந்தவராகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தை இயக்குநர் கோகுல் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். அவர் ஒரு சிகை அலங்கார நிபுணராக பணியாற்றுகையில், தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், இயக்குநர் கோகுல் அதை முற்றிலும் செய்யத் தவறிவிடுகிறார். சிங்கப்பூர் சலூனில் பல கதைகளை ஒன்றிணைக்க இயக்குநர் கோகுல் முயற்சித்துள்ளார். இது துரதிர்ஷ்டவசமாக சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை’’ என எழுதியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.