Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-singapenne serial today promo episode on september 16 2024 indicates anandhi is unable to receive help - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 16, 2024 12:22 PM IST

Singapenne Serial: அப்போது அவர்கள் இனிமேல் நீங்கள் கையெழுத்திட்டால் செக் பாஸ் ஆகாது என்றனர் இதையடுத்து இதுகுறித்து அவன் அப்பாவிடம் கேட்டான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: எல்லாம் விதி..  ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

இதற்கிடையே, ஆனந்தி மகேஷிடம் உதவி கேட்க வருவது அவரது அம்மாவிற்கு எப்படி தெரிந்தது என்று அன்புவின் தோழன் கேட்க, அன்பு அதை மித்ரா கூறி இருப்பாள் என்று சொன்னான்.

இதற்கிடையே மகேஷ் கையெழுத்திட்ட செக்கானது பவுன்ஸ் ஆனதாக தகவல் வர, மகேஷ் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டான். அப்போது அவர்கள் இனிமேல் நீங்கள் கையெழுத்திட்டால் செக் பாஸ் ஆகாது என்றனர் இதையடுத்து இதுகுறித்து அவன் அப்பாவிடம் கேட்டான்.

மற்றொரு பக்கம், கருணாகரன் ஆனந்திக்கு யாராவது உதவி செய்தால் அவர்களை நான் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டுகிறான். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம் அழகப்பன் சொக்கலிங்கம் செய்த சூழ்ச்சியின் காரணமாக நிலத்தை இழந்து இழந்திருந்தான். அந்த நிலத்தை மீட்பதற்காக இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்து, 10 லட்ச ரூபாய் பணத்தை எப்படியாவது திரட்ட முயன்றான். ஆனால் யாருமே அவனுக்கு உதவ முன் வரவில்லை. இதையடுத்து வீட்டிற்கு வந்த அவன் மனைவியிடமும், மகளிடமும் அழுதான்.

அந்த நேரத்தில்தான் ஆனந்தி போன் செய்தாள். ஆனந்தியிடம் பேசும் பொழுதே அழகப்பன் அழ, ஆனந்தி என்னுடைய தலையை அடமானம் வைத்தாவது அந்த நிலத்தை நான் மீட்டெடுப்பேன் என்று உறுதி அளித்தாள். ஆனால், அதை வேண்டாம் என்று மறுத்த அழகப்பன், நான் எதற்கும் லாய்க்கு இல்லாதவன். என்னுடைய வாழ்விற்கு அர்த்தமான நிலத்தையே கைவிட்டவன் என்று சொல்லி தன்னைத்தானே நொந்து கொண்டார். அவரை ஆசுவாசப்படுத்திய ஆனந்தி, எதற்கும் பயப்பட வேண்டாம். மகேஷ் அன்பு உள்ளிட்டோரிடம் நான் பணம் கேட்டிருக்கிறேன். நிச்சயமாக பணம் கிடைத்துவிடும். நிலம் நம்மை விட்டு செல்லாது என்று கூறினாள்.

அவமானப்படுத்திய அம்மா

அதன் பின்னர் சற்று ஆறுதல் அடைந்த அழகப்பன் நீ நிம்மதியாக இரு என்று சொல்லி ஃபோனை வைத்தார். இதையடுத்து ஆனந்தி மகேஷிடம் உதவி கேட்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல, அவள் கதவை திறந்ததும் மகேஷின் அம்மா நின்று கொண்டிருந்தார்.

ஏற்கனவே மகேஷ் ஆனந்தியை காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்ததில் கடுப்பில் இருந்த அவள், ஆனந்தி உதவி கேட்டு வருகிறார் என்பதை தெரிந்து, அவளை ஜாட மாடையாக குத்திக்காட்டி பேசினாள். தொடர்ந்து, பணம் தர முடியாது என்று சொல்லி, அவளை அனுப்ப முயன்ற போது, மகேஷின் அப்பா அங்கு வந்தார். ஏற்கனவே அங்கு நடந்து விஷயத்தை மகேஷிடமோ, அவரது அப்பாவிடமோ சொல்லக்கூடாது என்று மகேஷின் அம்மா கூறி இருந்த நிலையில், ஆனந்தி எதுவும் சொல்லாமல் மன்னிப்பு கேட்க வந்ததாக சொல்லி சமாளித்தாரள்.

இதற்கிடையே பேசிய மகேஷின் அப்பாவும், தயவு செய்து மகேஷிடம் கொஞ்சம் இடைவெளியை கடைப்பிடி. அவன் ஒரு விளையாட்டு பையன் என்று சொன்னார்.

இன்னொரு பக்கம் அன்பும், அவனது நண்பனும் பணத்திற்காக யார் யாரிடமோ சென்று உதவி கேட்டார்கள். ஆனால், ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதையடுத்து உண்மையான நண்பர்களின் முகம் எப்போது தான் தெரிகிறது என்று ஆதங்கப்பட்டான் அன்பு. அத்துடன் நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.