Singapenne Serial: ஒட்டி நிற்கும் மகேஷ்.. யார் இந்த ஹாஸ்டல் வார்டன்? - சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ!
Singapenne Serial: ‘ஏற்கனவே ஹாஸ்டல் வார்டனுக்கும், மகேஷுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழும் வகையில் காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது மகேஷின் அம்மாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி இன்றைய எபிசோடில் உண்மையில் ஹாஸ்டல் வார்டன் யார்? என்ற கேள்விக்கு’ - சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ!

Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில், ‘ஏற்கனவே மகேஷிற்கு ஆனந்தி சாப்பாடு கொடுத்ததை பார்த்து கொந்தளித்த மகேஷ் அம்மா நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்றார்.
யார் இந்த ஹாஸ்டல் வார்டன்?
அங்கு அவரை செக்யூரிட்டி தடுத்து நிப்பாட்ட, இன்னும் கொதித்த மகேஷின் அம்மா, உன்னுடைய ஹாஸ்டல் வார்டன் செய்த காரியத்திற்கு, நான் இவ்வளவு மரியாதை கொடுப்பதே அதிகம் என்று சண்டையிடுகிறார். இதையடுத்து ஹாஸ்டல் வார்டன் வெளியே வந்து பார்க்க, அவரைப் பார்த்த மகேஷ் அம்மா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
ஏற்கனவே ஹாஸ்டல் வார்டனுக்கும், மகேஷுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழும் வகையில் காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது மகேஷின் அம்மாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி இன்றைய எபிசோடில் உண்மையில் ஹாஸ்டல் வார்டன் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனை தொடர்ந்து ஆனந்தி எங்கோ கிளம்பி நிற்க, ஹாஸ்டல் வார்டன் ஆனந்திக்கு போன் செய்து எங்கே செல்கிறாய் என்று கேட்கிறார். ஆனந்தி அதை சொல்ல திணறுகிறாள்.’ தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கடந்த சிங்கப்பெண்ணே எபிசோடில் ஹாஸ்டல் வார்டன் கொடுத்து அனுப்பிய சாப்பாட்டை மகேஷுக்கு ஆனந்தி கொடுத்தாள். முதலில் அதனை சாப்பிட மகேஷ் மறுக்க, நான் சொன்னால் கூட சாப்பிட மாட்டீர்களா என்று ஆனந்தி கேட்ட உடன், சாப்பிட ஆரம்பித்தான்.
அந்த நேரத்தில் மகேஷின் அம்மாவும் அவன் சாப்பிடவில்லையே என்று, அவனைப் பார்ப்பதற்கு சாப்பாட்டோடு கம்பெனிக்கு வந்தார். இங்கு மகேஷூம் ஆனந்தியும் ஒரே கேபினேட்டில் இருப்பதை பார்த்த அவர் கோபத்தில் பொங்கினார். அதுமட்டுமில்லாமல் ஆனந்தியை உடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கருணாகரனுக்கு கட்டளையிட்டார்.
கருணாகரனின் வாய்ப்பு
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த கருணாகரன், ஆனந்தியை வேலையை விட்டு செல்லுமாறு சொல்ல, உடன் இருந்த அன்பு, ஏன் அவளை வேலை விட்டு செல்லச் சொல்கிறீர்கள்; உரிய காரணம் இல்லாமல் அவள் செல்லும் மாட்டாள் என்கிறான்.
இந்த நிலையில் அங்கிருந்து அனைவரும் ஆனந்தியை கம்பெனியை விட்டு வெளியே அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கின்றனர். மேலும், ஆனந்தியை கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினால், நாங்கள் அனைவருமே கம்பெனியை விட்டு வெளியே செல்கிறோம் என்று போராட்டம் நடத்தினர். இருப்பினும் கருணாகரன் அனைவரையும் வெளியே அனுப்பி விடலாம் என்று சொல்ல, அதற்கு மகேஷின் அம்மா ஓகே என்று சொல்கிறார்.
இந்த நிலையில் இடையே வந்த மித்ரா பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு, மகேஷின் அம்மாவை சாந்தப்படுத்தி, அனைவரையும் வேலை பார்க்க வைக்கிறார்; இதையடுத்து மகேஷின் அம்மாவை தனியாக அழைத்து வந்த மித்ரா, நீங்கள் ஆனந்திக்கு எதிராக செய்யும் எல்லா விஷயங்களும் மகேஷ் இன்னும் இன்னும் கோபத்திற்கு உள்ளாக்கும்.
ஆனந்தியை மகேசை விட்டு பிரிப்பதற்கு மகேஷாகவே ஆனந்தி வெறுக்க வேண்டும் அப்படி வெறுப்பதற்கு ஆனந்தியிடம் இருக்கும் ஏதோ ஒரு குணம் நிச்சயம் மகேஷூக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது; அதை என்ன என்று கண்டுபிடித்து, அதை மகேஷுக்கு எதிராக செயல்படுத்த வேண்டும் என்று சொல்ல, மகேஷின் அம்மா நிலைமையை புரிந்து கொண்டாள்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்