Singapenne Serial: மகேஷின் மட்காத ஆசை.. நெஞ்சுக்குள் எரியும் காதல்.. திண்டாடும் ஆனந்தி -சிங்கப்பெண்ணே சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: மகேஷின் மட்காத ஆசை.. நெஞ்சுக்குள் எரியும் காதல்.. திண்டாடும் ஆனந்தி -சிங்கப்பெண்ணே சீரியல்

Singapenne Serial: மகேஷின் மட்காத ஆசை.. நெஞ்சுக்குள் எரியும் காதல்.. திண்டாடும் ஆனந்தி -சிங்கப்பெண்ணே சீரியல்

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2025 10:44 AM IST

Singapenne Serial: மகேஷின் அம்மா சாப்பாட்டை கொண்டு மகேசை பார்க்க வர, ஆனந்தி ஹாஸ்டல் வார்டன் கொடுத்த சாப்பாட்டை மகேஷிடம் கொடுக்க சென்றாள். - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Singapenne Serial: மகேஷின் மட்காத ஆசை.. நெஞ்சுக்குள் எரியும் காதல்.. திண்டாடும் ஆனந்தி -சிங்கப்பெண்ணே சீரியல்
Singapenne Serial: மகேஷின் மட்காத ஆசை.. நெஞ்சுக்குள் எரியும் காதல்.. திண்டாடும் ஆனந்தி -சிங்கப்பெண்ணே சீரியல்

இந்த பிரச்சினையில், கருணாகரனை அழைத்து, ஆனந்தியை வெளியே அனுப்பு என்று மகேஷ் அம்மா ஆர்டர் போட, மகேஷ் அவள் வெளியே சென்றால் நான் கம்பெனியை விட்டு சென்றுவிடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறான். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர்.

‘சிங்கப்பெண்ணே’ சீரியலில் நேற்றைய தினம் வார்டன் மகேஷ் உடன் சேர்ந்து ஆனந்தியை பெண் கேட்க ஆனந்தி வீட்டிற்கு சென்றதை மித்ரா சுயம்பின் மூலமாக தெரிந்துகொண்டாள். இதையடுத்து வார்டனை அவமானப்படுத்தும் வகையில், ஹாஸ்டலில் புதிதாக பெண் பார்த்து கொடுக்கும் திட்டமெல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லி நக்கல் அடித்தாள்.

இதைப் பார்த்த ஆனந்தி கொந்தளித்து யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறாய்? தேவையில்லாததை பேசாதே என்று சாட, வார்டன் அவளை கட்டுப்படுத்துகிறார். அதனை தொடர்ந்து ஆனந்தியை அங்கிருந்து போகும் படி சொல்ல, வார்டனும், மித்ராவும் பேசுகிறார்கள்.

ஏன் தேவையில்லாத வேலை

மித்ரா வார்டனிடம், ஏன் தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்கிறீர்கள்; உங்களால் மகேஷின் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினை வெடித்திருக்கிறது. என்று கூறினாள். அதற்கு வார்டன், மகேஷ் அழைத்ததனால் மட்டுமே தான் சென்றதாக கூறினார். ஆனாலும் மித்ரா அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, ஒரு கட்டத்தில் வார்த்தைகளை அதிகமாக விட, டென்ஷன் ஆன வார்டன், இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்று சொல்லி எச்சரித்து அனுப்பினாள்.

இன்னொரு பக்கம் மகேஷின் அம்மா, மகேஷ் வீட்டில் நடந்து கொள்வதை பொறுத்துக் கொள்ளாமல், அதை மகேஷின் அப்பாவிடம் சொல்லி புலம்புகிறாள். அவரோ, மகேஷ் அம்மாவை எவ்வளவோ முயற்சி செய்து சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை; இதற்கு இடையே மகேஷ் அங்கு வந்த நிலையில், மகேஷ் அப்பா அவரை சாப்பிட சொல்கிறார்

நிம்மது இல்லாத வீடு

ஆனால் மகேஷோ நிம்மதி இல்லாத வீட்டில் எப்படி நான் சாப்பிட முடியும் என்று சொல்லி, சென்று விட்டான். மித்ரா உடனான பேச்சுவார்த்தையில் மகேஷ் வீட்டில் சாப்பிடாமல் சென்றதை தெரிந்துகொண்ட வார்டன் அவனுக்கு சாப்பாடு செய்து, அதை ஆனந்தியின் வாயிலாக கொடுத்து அனுப்பினாள்.

ஆனந்தி அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாள். ஆனாலும், அவளை சமாதானப்படுத்தி, வழிக்கு கொண்டு வந்து, சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தாள் வார்டன். ஆனந்தி சாப்பாட்டை கொண்டு சென்று மகேஷிடம் கொடுத்தாள்.

ஹாஸ்டல் வார்டனனின் பரிவு

மகேஷ் ஆனந்தி நம்மை தான் பார்க்க வந்திருக்கிறாள் என்று சொல்லி, ஆசுவாசப்பட அவள் ஹாஸ்டல் வார்டன் சாப்பாடு கொடுத்து அனுப்பி இருப்பதையும் நீங்கள் சாப்பிடுவதையும் உறுதி செய்வதை பார்ப்பதற்காகவுமே வந்ததாக சொல்ல, மகேஷ் எனக்கு பசிக்கவில்லை, நீங்கள் இதை எடுத்துச் செல்லலாம் என்று கூறினான்.

இதனையடுத்து ஆனந்தி, ஹாஸ்டல் வார்டன் சொன்னால்தான் சாப்பிட மாட்டீர்கள்; நான் சொன்னால் கூடவா சாப்பிட மாட்டீர்கள் என்று கேட்க, உருகிய மகேஷ் அவளை பார்த்தான். இதற்கிடையே மகேஷின் அப்பாவிடம் மகேஷ் அம்மா, அவன் சாப்பிட்டானா இல்லையா என்ற கேளுங்கள் என்று சொல்ல, நீயே சென்று அவன் சாப்பிட்டானா இல்லையா என்று தெரிந்து கொள் என்று கூறிவிட்டார் மகேஷ் அப்பா. இதையடுத்து நானே சாப்பாட்டை கொண்டு செல்வதாக கூறிவிட்டு கம்பெனிக்கு புறப்பட்டார் மகேஷ் அம்மா..

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.