மகேஷை தூண்டி விட்ட மித்ரா.. சதியில் சிக்குவாரா அன்பு? சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
ஆனந்தி காதலித்த அழகன் யார் என்பதை கண்டுபிடிக்க மித்ரா தனது சூழ்ச்சியை பயன்படுத்துகிறார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தான் காதலித்த அழகன் யார் என்பதைக் கண்டுபிடித்தே தீருவேன் என ஆனந்தி கங்கணமிட்டு வர ஆனந்திக்கு ஆதரவாக இருக்கும் மகேஷையும் அன்பையும் பிரிக்க திட்டமிடுகிறார் மித்ரா. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.
அழகனைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டும் ஆனந்தி
எனக்கு எவ்வளவு தடை வந்தாலும், நான் அழகனை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என ஆனந்தி, தன்னுடன் கார்மெண்ட்சில் வேலைபார்க்கும் நபர்களிடம் உறுதியாக கூறி வருகிறார்.
இந்த நிலையில், அழகன் இந்த கார்மெண்ட்சில் வேலை செய்பவராகத் தான் இருக்க முடியும். ஏனென்றால், இங்குள்ளவர்களுக்குத் தான் ஆனந்தியைப் பற்றி அனைத்து தகவல்களும் தெரியும் என்கிறார். அதற்கு மகேஷ் அப்படி எல்லாம் இருக்காது எனக் கூறுகிறார்.
சதி வேலையை தொடங்கிய மித்ரா
இந்த சமயத்தில் தன்னுடைய சதித் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மித்ரா, இங்குள்ளவர்களில் யாரும் அழகன் இல்லை என்றால் ஆனந்தியைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிந்தவர் அன்பு தான். அப்போது, அன்பு ஏன் அழகனாக இரு்ககக் கூடாது என மகேஷ் மனதில் சந்தேகத்தை விதைக்கிறார்.
இதை ஏற்க மறுத்த மகேஷ், கார்மெண்ட்சிஸ் வேலை செய்யும் அனைவரையும் பேப்பரில் எழுத வைத்து அதை சேகரிக்கிறார். இதன் மூலம் நிச்சயம் அழகனை கண்டுபிடித்தே தீருவேன் என திட்டவட்டமாக இருக்கிறார். மேலும், அழகனை கண்டுபிடித்து, அவரது சாப்டரை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அழகனைப் பற்றி அறியும் ஆனந்தி
முன்னதாக, சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு தான் காதலித்த அழகன் என்பவர் குறித்த தகவல் ஆட்டோக்காரர் மூலமாக தெரியவந்ததை அடுத்து, அழகனை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆனந்தி தள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஆனந்தி, என்ன செய்வது என்று புரியாமல் அன்புவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, நான் சொல்வதைக் கேட்டு கோபப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் பேசவே ஆரம்பிக்கிறார்.
விழி பிதுங்கிய அன்பு
அப்போது, அவர் அழகன் குறித்து தான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களையும் அன்புவிடம் கூறினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அன்பு விழி பிதுங்கி நின்றான்.
அதே சயமத்தில், மித்ரா கம்பெனியில் உள்ள லெட்டர் ஒன்றை கண்டுபிடித்து, அதிலுள்ள கையெழுத்தை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்க நினைக்கிறார். இதற்கு கருணாகரனை தனக்கு துணையாக வைக்க விரும்புகிறார்.
இதற்கிடையில், இந்த ஒருமுறையாவது என் போக்கில் என்னை விடுங்கள். நான் எப்படியாவது இன்றைக்குள் அழகன் யார் என்பதைக் கண்டறிந்து உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவேன் என சபதமிடுகிறார்.
இந்தக் காட்சிகளை பார்க்கும் போது ஆனந்தி, அழகன் யார் என்பதை விரைவில் கண்டு பிடிப்பார் எனவும், இதனால் அன்புவிற்கும் ஆனந்திக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்