Singapenne Serial: பிடிச்சது ஒன்னு.. கெடச்சது ஒன்னு.. சந்தோஷத்திலும் தவிக்கும் ஆனந்தி.. முடியல..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: பிடிச்சது ஒன்னு.. கெடச்சது ஒன்னு.. சந்தோஷத்திலும் தவிக்கும் ஆனந்தி.. முடியல..

Singapenne Serial: பிடிச்சது ஒன்னு.. கெடச்சது ஒன்னு.. சந்தோஷத்திலும் தவிக்கும் ஆனந்தி.. முடியல..

Malavica Natarajan HT Tamil
Jan 30, 2025 09:02 AM IST

Singapenne Serial: ஒருவழியாக அன்புவின் அம்மா தன்னை மருமகளாக ஏற்றுக் கொண்ட சந்தோஷத்தில் இருந்தால், ஆனந்தி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் மகேஷ்.

Singapenne Serial: பிடிச்சது ஒன்னு.. கெடச்சது ஒன்னு.. சந்தோஷத்திலும் தவிக்கும் ஆனந்தி.. முடியல..
Singapenne Serial: பிடிச்சது ஒன்னு.. கெடச்சது ஒன்னு.. சந்தோஷத்திலும் தவிக்கும் ஆனந்தி.. முடியல..

உண்மை அறிந்த அன்பு அம்மா

ஆனால், ஆனந்தியின் பெயரை எடுத்தாலே அன்புவின் அம்மாவிற்கு பிடிக்காது என்பதால், நாங்கள் தான் உங்களை பார்த்துக் கொண்டோம் என அன்புவும் அவரது தங்கையும் கூறினர். ஆனால், இந்த விஷயம் எப்படியோ நர்ஸ் மூலம் அன்பு அம்மாவிற்கு தெரியவர என்னுடன் ஹாஸ்பிட்டலில் இருந்தது யார் என அன்புவையும் அவரது தங்கையையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை அறிந்து கொண்டார். பின், ஆனந்தியை ஹாஸ்டலில் போய் திட்டவும் செய்தார்.

ஆனந்தியை ஏற்றுக் கொண்ட அன்பு அம்மா

இதைத்தொடர்ந்து, அன்புவின் தங்கை நடந்தது எல்லாவற்றையும் கூறி, ஆனந்தி மேல் எந்த தவறும் இல்லை என்றும், அவர் நம் குடும்பத்தை பிரிக்க வந்தவர் அல்ல. அதை வாழ வைக்க வந்தவர் என்றெல்லாம் பேசி அவர் அம்மாவின் மனதை மாற்றினார். இதனால், அன்பு அம்மாவிற்கு ஆனந்தியின் மீது இருந்த கோபம் போனது. அத்துடன், ஆனந்தியை கோயிலுக்கு வரவைத்து அவர் வாயாலேயே ஆனந்தி தான் தன் மருமகள் என சொல்ல வைத்தார்.

சவாலில் ஜெயித்த ஆனந்தி

இவர் இப்படி சொல்லியதன் மூலம் ஆனந்தி அவர் அன்புவிடம் போட்ட சவாலில் ஜெயித்துவிட்டார். அன்புவின் நிச்சயதார்த்தம் நின்ற சமயத்தில் எப்படியாவது உங்க அம்மாவ அவங்க வாயால என்ன மருமகன்னு சொல்ல வைப்பேன் என முன்னதாக சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில், ஆனந்தியிடம் அன்புவின் அம்மா, நான் உன்னை மருமகளாக ஏற்றுக் கொண்டேன். நீ என்னை மாமியாராக ஏற்றுக் கொள்வாயா என கேட்டார். அதற்கு எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அது அன்பு கூட தான்னு சொல்லி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆனந்தியை பெண் கேட்ட மகேஷ்

அதே சமயத்தில், ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டனும், மகேஷும் ஒன்றாக கிளம்பி ஆனந்தி வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு வந்து, இருவரும் சேர்ந்து ஆனந்தியை பெண் கேட்டுள்ளார். அப்போது ஹாஸ்டல் வார்டன் மகேஷ் உங்கள் பெண்ணை காதலிக்கிறான். அதுபற்றி பேசத்தான் இங்கே வந்ததாக கூறினார். இதைக் கேட்ட ஆனந்தியின் அம்மாவும் அப்பாவும் என்ன சொல்வது எனத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மித்ராவின் திட்டம்

இதற்கிடையில், மகேஷூம் ஹாஸ்டன் வார்டனும் ஆனந்தியை பெண் கேட்டு செல்வதை அறிந்த மித்ரா, அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என ஆனந்தியின் ஊரில் உள்ள ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

இதன் மூலம், மித்ராவின் திட்டம் நிறைவேறுமா, ஆனந்திக்கும் அன்புவிற்கும் மகேஷால் பிரச்சனை வருமா, மகேஷிற்கு உண்மை தெரியவருமா என்ற கேள்விக்களுக்கு எல்லாம் இன்னும் சில நாட்களில் பதில் கிடைத்து விடும். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.