Singapenne Serial: சந்தோஷத்தில் துள்ளிய மகேஷ்.. சிக்கிக் கொண்ட ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல்..
Singapenne Serial: ஆனந்தியை எப்படி பெண் கேட்டு செல்வது என ஹாஸ்டல் வார்டன் மகேஷிடம் கூறியதும் மகேஷ் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

Singapenne Serial: மகேஷ், அவரது பிறந்த நாளில் ஆனந்தியிடம் காதலை சொல்ல பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், ஆனந்தி அதிலிருந்து தப்பிக் கொண்டே இருக்க, விடாப்பிடியாக தன் காதலை சொன்னார். ஆனால், ஆனந்தி மகேஷின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், தான் எப்போதும் உங்களை காதலிக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறினார்.
வார்டனிடம் உதவி கேட்ட மகேஷ்
இதனால், மனம் தாங்க முடியாத மகேஷ், ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு குடித்துவிட்டு வந்து ரகளை செய்தார். அவரை ஆனந்தியும், மித்ராவும் சமாதானம் செய்தும் அங்கிருந்து நகர வைக்க முடியவில்லை. பின், அன்பு அந்த சமயத்தில் வந்து உதவினார்.
பின், தன் தவறை உணர்ந்த மகேஷ், ஆனந்தியிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஹாஸ்சல் வார்டனிடமும் மன்னிப்பு கேட்டார். அத்துடன், என்னையும் ஆனந்தியையும் எப்படியாவது ஒன்றாக சேர்த்து வைத்து விடுமாறு ஹாஸ்டல் வார்டனிடம் கோரிக்கையும் விடுத்தார்.
சந்தேகத்தில் மகேஷ் அம்மா
இதற்கு ஹாஸ்டல் வார்டனும் சம்மதம் தெரிவித்தார். காரணம். மகேஷ், ஹாஸ்டல் வார்டனின் மகன் என்பதால் தான். ஆனால், மகேஷ் உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டனின் மகன் தானா, அப்படி என்றால் ஏன் அவர்கள் பிரிந்தார்கள் என்ற கதை எல்லாம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
இந்நிலையில், மகேஷ் அடிக்கடி ஹாஸ்டல் வார்டனைப் பார்க்க வருவதும், அவரிடம் தனியாக பேசுவதும் அதிகரிக்கத் தொடங்கியது . இவர்கள் எதர்காக சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என தெரியாத மித்ரா, மகேஷின் அம்மாவிடம் தகவல் கூறினார். இதனால், மகேஷின் நடத்தை குறித்து அவரது அம்மாவிற்கு சந்தேகம் வந்துள்ளது.
வார்டனால் துள்ளிக் குதித்த மகேஷ்
இந்நிலையில், மீண்டும் மகேஷ் ஹாஸ்டல் வார்டனை சந்திக்க வந்துள்ளார். அப்போது, ஹாஸ்டல் வார்டனிடம் தன் மனக் குமுறலைக் கொண்டித் தீர்த்துள்ளார். ஆனந்தி, தன்னை விட்டு வெகுதூரம் சென்றதாக அவர் புலம்புகிறார். இதை ஹாஸ்டல் வார்டனும் கேட்டுக் கொண்டிருந்தார்.
பின், ஆனந்தியின் குடும்பத்தை பற்றியும், ஆனந்தியை எப்படி சமாளிக்க வைப்பது என்பது பற்றியும் ஹாஸ்டல் வார்டன் மகேஷிடம் பொறுமையாக கூறினார். இதைக் கேட்ட மகேஷ், அப்போ இனி நான் ஆனந்தியை பெண் கேட்டு செல்லலாமா என வார்டனிடம் கேட்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.
ஆனந்தி கொடுத்த ஷாக்
இவர், இப்படி சந்தோஷத்தில் துள்ளக் குதித்து ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்த மகேஷை ஆனந்தி பார்த்துவிட்டாள். இதனால், அவளிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் மகேஷும் ஹாஸ்டல் வார்டனும் திகைத்து நிற்கின்றனர்.
அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அன்பு அம்மா
அதேசமயத்தில், அன்புவின் அம்மா செயின் பறித்து சென்றவர்களால் காயம் பட்டுஹாஸ்பிட்டலில் இருக்கும் போது, அவருக்கு துணையாக இருந்தது ஆனந்தி தான் என அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால், அடுத்தது என்ன நடக்கும் என எல்லாரும் பயந்த நிலையில், அன்பு அம்மா ஆனந்திக்கு எதிராக சண்டை போட ஆரம்பித்துவிட்டார். அத்தோடு நில்லாமல் அவர் நேராக ஹாஸ்டலுக்கு சென்று ஆனந்தியை சந்தித்து கேள்வி மேல் கேட்டு வருகிறார். இது குறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்