Singappenne Serial: வார்டன் லேடிக்கும் மகேஷிற்கும் என்ன பர்சனல்? திட்டம் போட்டு தூக்கும் ஆனந்தி
Singappenne Serial: மகேஷ், ஹாஸ்டல் வார்டனை சந்திப்பதற்காக வந்ததை மித்ரா, மகேஷின் அம்மாவிடம் கூறியதால் அவர்கள் இருவருக்கும் என்ன பர்சனல் இருக்கிறது என விவாதித்து வருகின்றனர்.

Singappenne Serial: ஆனந்தி தன்னை காதலிக்க மறுத்த நிலையில், வேறு யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியாமல் மகேஷ், ஹாஸ்டல் வார்டனை சந்தித்து அவர் காதலை கூறி அதை சேர்த்து வைக்க உதவுமாறும் கூறினார்.
ஷாக் ஆன மகேஷ் அம்மா
இதனால், இவர் அடிக்கடி ஹாஸ்டல் வார்டனை சந்திக்க வருகிறார். இதை பார்த்த மித்ரா, மகேஷிடம் கேள்வி கேட்க மகேஷ் அதற்கு கோவமாக பதில் கூறினான், நான் எதற்கு வந்தேன் என உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இது என்னோட பர்சனல் என கோவப்பட்டான்.
இதனால், சந்தேகமான மித்ரா, மகேஷின் நடவடிக்கைகள் குறித்து அவரது அம்மாவிடம் கூறினார். இதைக் கேட்டு ஷாக் ஆன மகேஷ் அம்மா, ஒரு வார்டன் லேடிக்கும் என் பையன் மகேஷிற்கும் என்ன பர்சனல் வேண்டி இருக்கு என மித்ராவிடம் கேள்வி எழுப்பினார். இவர்கள் இதுபற்றி ஏதும் தெரியாமல் மகேஷின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்தனர்.