Singapenne Serial: ஹாஸ்டலுக்கு வந்த மகேஷ்.. சந்தேகத்தில் மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Singapenne Serial: ஹாஸ்டல் வார்டனைப் பார்கக வரும் மகேஷை மித்ரா தடுத்து நிறுத்தி காரணம் கேட்டதற்கு மகேஷ் முகத்தில் அடித்தது போல் பதில் சொல்லி உள்ளான்.

Singapenne Serial: ஆனந்தியை உருகி உருகி காதலிக்கும் மகேஷ், ஆனந்திக்காக தன் அம்மா அப்பாவையே எடுத்து எறிந்து பேசும் நிலைக்கு சென்றுவிட்டான். அத்துடன் ஆனந்தி என் வாழ்க்கையில் இல்லை என்றால் என்னை உயிருடனே பார்க்க முடியாது என்றும் கூறி அனைவரையும் எச்சரித்து உள்னான்.
மூர்க்கத்தனமான மகேஷ்
இதற்கிடையில், மகேஷ் ஆனந்தியிடம் காதலை சொல்லி அதை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மகேஷ் மூர்க்கத்தனமாக மாறினான். குடித்துவிட்டு ஆனந்தி தங்கி இருக்கும் ஹாஸ்டலில் வந்து தகராறு செய்தான். பின் அவனை அன்பு தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அழைத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மன்னிப்பு கேட்ட மகேஷ்
பின் தன் தவறை உணர்ந்த மகேஷ், ஹாஸ்டல் வார்டனிடம் மன்னிப்பு கேட்டதுடன், தன் காதலுக்கு உதவுமாறும் கூறியுள்ளான். அப்போது, ஆனந்தியை நிச்சயம் உனக்கு திருமணம் செய்ய வைக்க உதவுவேன் என ஹாஸ்டல் வார்டனும் மகேஷிற்கு நம்பிக்கை தந்துள்ளார்.
வார்டனின் மகனா மகேஷ்?
ஹாஸ்டல் வார்டன் இப்படி கூறியதற்கு, மகேஷ் அவருடைய மகன் என புதிதாக ஒரு கதையை கூறி வந்கார். மேலும், அவர் நினைவாக உள்ள விளையாட்டு பொருட்களையும் வைத்து பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ஹாஸ்டல் வார்டன் பாதுகாத்து வைத்திருந்த பொருளை மித்ரா திருடிவிட்டு ஆனந்தியை மாட்டிவிட நினைக்கிறாள்.
மீண்டும் ஹாஸ்டல் வந்த மகேஷ்
இந்த சமயத்தில் தான், மகேஷ் மீண்டும் ஹாஸ்டல் வார்டனை பார்க்க ஹாஸ்டலுக்கு வருகிறான். அப்போது, மகேஷை பார்த்து வேகமாக வந்த மித்ரா நீ ஹாஸ்டலில் என்ன பண்ற எனக் கேட்கிறாள்.
அசிங்கப்பட்ட மித்ரா
அப்போது, உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார். இதனால் மித்ரா கோவமாக இருந்தார்.
போலீஸ் ஸ்டேஷனின் அன்பு, ஆனந்தி
அதே சமயம், அன்புவும், ஆனந்தியும் அன்பு அம்மாவிடம் இருந்து செயின் பறித்து சென்றவனைப் பற்றி விசாரிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளனர். அப்போது, அந்த பைக் டாக்ஸி டிரைவர் இவர்களுக்கு முக்கிய தகவல் சொல்ல காத்திருக்கிறான். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
வார்டன் ரூமில் திருடிய மித்ரா
முன்னதாக ஹாஸ்டல் வார்டனுக்கும் ஆனந்திக்கும் இருக்கும் நெருக்கம் மற்றும், எப்போதும் மித்ரா செய்யும் தவறுகளை கண்டுபிடித்து அவளை எச்சரிப்பதால் உண்டான கோபத்தால், வார்டனின் பொருளை மித்ரா திருடுகிறாள்.
துப்பறியும் ஆனந்தி
தான் திருடி வந்த பொருளை அவர்கள் அறையிலேயே வைத்தால் பிரச்சனை என நினைத்த மித்ரா, அதனை ஆனந்தியின் ரூமில் வைக்க நினைத்தார். இதுபற்றி எதுவும் அறியாத ஆனந்தி, ஹாஸ்டல் வார்டனின் பொருளை அவரிடமே திரும்பத் தர எண்ணி, எல்லாருடைய ரூமையும் சோதனை இடுகிறாள்.
எங்கும் அந்ப் பொருள் கிடைக்காததால், மித்ரா தற்போது நாங்கள் ஆனந்தியின் ரூமில் தேடலாமா எனக் கேட்கிறாள். அப்போது, தாராளமா தேடலாம். நீங்கள் ஒரு இடத்தில் தேட மறந்துவிட்டீர்கள் எனக் கூறி பாத்ரூமில் தேடினாள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்