Singapenne Serial: அழகனை தேடி அலையும் மித்ரா.. தொக்காக சிக்கப் போகும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Singapenne Serial: மகேஷிடமிருந்து ஆனந்தியை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மித்ரா, ஆனந்தி காதலிக்கும் அழகன் யார் என்பதை கண்டுபிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

Singapenne Serial: ஆனந்தியிடம் தன் காதலை நிரூபிக்கும் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தங்கி இருக்கிறார் மகேஷ். இந்த சூழலில் எப்படியாவது மகேஷ் மனதில் இருந்து அழிக்க வேண்டும் எனத் துடித்து கொண்டிருந்த மித்ராவிற்கு, ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விட்டதும், அவருடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரிய வந்தது.
அழகனைத் தேடி அலையும் மித்ரா
இதையடுத்து, அழகன் யார் என்பதை அறிய முயன்ற மித்ரா, ஆனந்திக்கு உதவுவது போல் ஆனந்தியின் நண்பர்களிடம் அழகன் பற்றி விசாரித்துள்ளார். ஆனால், மித்ராவின் இந்த திட்டம் வேலை செய்யவில்லை.
இதையடுத்து, மித்ராவும் மகேஷின் அம்மாவும் கோவிலுக்கு சென்று, மகேஷ் வாழ்க்கையில் இருந்து ஆனந்தி எப்போது வெளியேறுவாள் என்பது குறித்து ஜோசியம் பார்த்தனர். அப்போது, ஆனந்தியை மகேஷ் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது என்று ஜோசியரும் கூறினார். இதனால் கோபத்தில் இருந்த மித்ராவும் மகேஷ் அம்மாவும் கோவிலில் இருந்து கிளம்பினர்.
தொக்காக சிக்கிய ஆனந்தி
அந்த சமயத்தில், ஆனந்தி கோவிலில் அன்புவிடம் பேசிக் கொண்டிருந்ததை இருவரும் பார்க்கின்றனர். அப்போது, நான் என்ன நினைக்குறேன் எனத் தெரியாமலே நீங்க பாட்டுக்கும் போன வைக்குறீங்க. என் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டது தெரியுமா என அன்புவிடம் ஆனந்தி கேட்டுக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த இருவரும் இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் என்ன உறவு இருக்கிறது என ஆராய ஆரம்பித்தனர்.
முன்னதாக, மித்ராவும் மகேஷ் அம்மாவும் ஆனந்திக்கும் அன்பவிற்கும் காதல் வர பல வேலைகளை செய்தும் அது பலனில்லாமல் போனதால், இப்போது இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சந்தோஷப்படுகின்றனர்.
ஸ்டட்டஸ் பேசிய அப்பா
இதற்கிடையில், லாட்ஜில் தங்கி இருக்கும் மகேஷை வீட்டிற்கு அழைக்க அவரது அப்பா வந்திருந்தார். அப்போது, கோவத்தில் இருந்த அவர், நீ இப்படி எல்லாம் செய்யுறது என் ஸ்டேட்டஸை பாதிக்கிறது. நீ கோபித்துவிட்டு லாட்ஜில் இருக்கிறதை பார்த்தால் யார் என்னை மதிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த மகேஷ், இப்போ கூட நீங்க எனக்காக வரல. உங்க ஸ்டேட்டஸ காப்பாத்த தான் வந்திருக்கீ்ங்க என கத்தினான்.
ஆதங்கத்தை கொட்டிய மகேஷ்
மேலும், நான் ஆனந்தியை காதலித்தது அம்மாவுக்கு ஸ்டேட்டஸ் பிரச்சனை, நான் லாட்ஜில் இருப்பது உங்களோட ஸ்டேட்டஸ் பிரச்சனை. அப்போ எனக்காக எப்போ யோசிப்பீங்க. உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் ஆனந்திய லவ் பண்றேன்னு சொன்னேன். ஆனா எனக்காக நீங்க என்ன பண்ணீங்க. ஆனா, இதையே நான் அன்புகிட்டயும் வார்டன் கிட்டயும் சொல்லும் போது அவங்க எனக்காக துணையா இப்போ வரைக்கும் நிக்குறாங்க. அதனால இனிமே நீங்க என்னோட குடும்பம் இல்ல. இவங்க ரெண்டு பேர் தான் என்னோட குடும்பம்" என பேசி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்