Singapenne Serial: ஆனந்தி இயத்தில் ஈட்டியை இறக்கிய மகேஷ் அம்மா.. தவிக்கும் அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
Singapenne Serial: ஆனந்தி தான் தன் வீட்டு மருமகள் என கார்மெண்ட்சில் வேலை செய்வோரிடம் மகேஷ் அம்மா சொன்னதைக் கேட்டு கதறி நியாயம் கேட்கிறார் ஆனந்தி.

Singapenne Serial: ஆனந்தியை உருகி உருகி காதலிக்கும் மகேஷ், தன் காதலை ஆனந்தியிடம் கூறியும் அவள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு நில்லாமல், அது மகேஷின் பெற்றோருக்கும் கௌரவக் குறைச்சலாகவே பட்டது. இதனால், ஆனந்திக்கும் தன் குடும்பத்திற்கும் தன் காதலின் ஆழத்தை புரிந்து கொள்ள வைக்கும் நோக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தங்கியிருந்தார் மகேஷ்.
மகேஷ் அம்மாவின் பயம்
இதனால், ஆதங்கம் தாங்காத மகேஷின் அம்மா, தன் மகனின் வாழ்க்கையில் இருந்து ஆனந்தி விலகுவாளா என் மகன் தான் சொன்னதை எல்லாம் கேட்டு நடப்பானா என குறி கேட்க கோயிலுக்கு வருகிறார். அப்போது அவர் மித்ராவையும் கோயிலுக்கு வர சொல்கிறார். அந்த சமயத்தில், கோயிலில் உள்ள சாமியார், மகேஷ் வாழ்க்கையை விட்டு அவ்வளவு எளிதில் ஆனந்தியை விரட்ட முடியாது என சொன்னதும் மகேஷ் அம்மாவிற்கு பயம் அதிகமானது.
