Singapenne Serial: அப்பா கொடுத்த வாக்கு.. மஜாவான மகேஷ்.. அதிர்ச்சியில் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!
Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று நடக்க இருக்கும் நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

Singapenne Serial: சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரமோவில், ‘மகேஷ் ஆனந்தியின் அப்பாவை சந்தித்ததும், கோபத்தில் மகேஷ்தான் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ள இருப்பவர் என்று சொன்னதும், ஆனந்திக்கு தெரிய வந்தது. இதைக் கேட்டு அவள் உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறாள் ஆனந்தி!; இதற்கிடையே மகேஷின் அம்மா, இனி நான் ஆனந்திக்கு கொடுக்கப் போகும் டார்ச்சரில், அவள் எப்படி அன்பு மீது உள்ள காதலை வெளியே சொல்கிறாள் பார் என்று மித்ராவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
இன்னொரு பக்கம் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழித்த ஆனந்தி, அன்புவை காதலிப்பதையும், அழகன் யார் என்பதையும் ஹாஸ்டல் வார்டனிடம் கூறுகிறாள்.’ இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், ஆனந்தியும் அன்பும் ஃபேக்டரியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க, கருணாகரன் காது குடைந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த மித்ரா அவரை கண்டித்து கொண்டிருக்க, திடீரென்று மகேஷின் அம்மாவும், மகேஷூம் தொழிலாளர்களை கூட சொல்கின்றனர்.
திடீரென்று ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று அனைவரும் திகைத்து நிற்க,யாரும் எதிர்பாராத விதமாக மகேஷின் அம்மா, ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறான். அவளையே அவன் கல்யாணம் செய்ய் இருக்கிறான் என்றும் இதற்கு ஆனந்தியின் வீட்டிலும் சம்மதம் கிடைத்து விட்டது என்று அதிர்ச்சி கொடுத்தார்.
ஊர்ஜிதமாகச் சொன்னாள்.
இதைக்கேட்ட ஆனந்தி உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து, நிச்சயமாக அப்படி இருக்காது என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடைய வீட்டில் இருந்து அந்த மாதிரியான ஒரு வாக்குறுதி வந்திருக்காது என்று ஊர்ஜிதமாகச் சொன்னாள்.
மேலும், அந்த சமயத்தில் அவள் அன்பு மீதான காதலை சொல்ல முன்வர, அன்பு அதைத் தடுத்து விட்டான். இந்த நிலையில் மகேஷின் அம்மா, ஆனந்தி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாள். அவளுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும் என்று மகேஷை கைகாட்ட, மகேஷ் ஆனந்தியின் வீட்டிற்கு சென்றதையும், அவர் அப்பா கோபத்தில் மகேஷுக்கு வாக்கு கொடுத்ததையும் பற்றி கூறினான். இந்த நிலையில், கோகிலாவிற்கு போன் செய்து ஆனந்தி கேட்க, அன்றைய தினம் அந்த சமயத்தில் ஆனந்தி வெளியே சென்று இருப்பது தெரிய வந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்