Singapenne Serial: வாழ்க்கையின் அடையாளமே அதுதான்.. கதறும் வார்டன்.. துப்பறியும் ஆனந்தி..
Singapenne Serial: ஹாஸ்டல் வார்டன் ரூமில் இருந்து காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்தே தீர வேண்டும் என ஆனந்தி எல்லா அறைகளையும் சோதனை செய்து வருகிறார்.

Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில், ஒளிபரப்பான சில காட்சிகளின் அடிப்படையில், மகேஷ் ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டன் மகனாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், தன் மகனின் நினைவு வரும் போதோ, அல்லது அவனிடம் பேச நினைக்கும் போது, ஹாஸ்டல் வார்டன், தன் கபோர்டில் வைத்திருக்கும் குழந்தைகளின் விளையாட்டு பொம்மையை எடுத்து பேசி வருவார்.
ஹாஸ்டல் வார்டன்- மகேஷ் உறவு
சில நாட்களுக்கு முன் மகேஷ், ஹாஸ்டல் வார்டனிடம் எப்படியாவது ஆனந்தியை என்னை காதலிக்க சம்மதிக்க வைக்குமாறும், அவளைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன் என்றும் கூறி உதவி கேட்டுள்ளான். அந்த சமயத்தில் தான் மகேஷ் ஹாஸ்டல் வார்டன் மகன் என்பதே தெரிந்தது.
வார்டன் ரூமில் திருடும் மித்ரா
இதையடுத்து, தன் மகன் தன்னை நம்பி கேட்ட முதல் விஷயம் அதை செய்தே ஆவேன் என வார்டன் பேசிக் கொண்டிருக்கையில் தான் அந்த விளையாட்டு பொருட்கள் முதன் முதலில் வெளியே காட்டப்பட்டது. இந்த பொருட்களில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்த மித்ரா, அதை வார்டன் ரூமில் இருந்து திருடுகிறாள்.
காரணம், ஹாஸ்டல் வார்டனுக்கும் ஆனந்திக்கும் இருக்கும் நெருக்கம் மற்றும், எப்போதும் மித்ரா செய்யும் தவறுகளை கண்டுபிடித்து அவளை எச்சரிப்பதால் உண்டா ன கோபம் தான்.
துப்பறியும் ஆனந்தி
தான் திருடி வந்த பொருளை அவர்கள் அறையிலேயே வைத்தால் பிரச்சனை என நினைத்த மித்ரா, அதனை ஆனந்தியின் ரூமில் வைக்க நினைத்தார். இதுபற்றி எதுவும் அறியாத ஆனந்தி, ஹாஸ்டல் வார்டனின் பொருளை அவரிடமே திரும்பத் தர எண்ணி, எல்லாருடைய ரூமையும் சோதனை இடுகிறாள்.
எங்கும் அந்ப் பொருள் கிடைக்காததால், மித்ரா தற்போது நாங்கள் ஆனந்தியின் ரூமில் தேடலாமா எனக் கேட்கிறாள். அப்போது, தாராளமா தேடலாம். நீங்கள் ஒரு இடத்தில் தேட மறந்துவிட்டீர்கள் எனக் கூறி பாத்ரூமில் தேடி வருகிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளிட்டுள்ளது.
கார்மெண்ட்சில் ஷாக்
முன்னதாக, கார்மென்ட்சிஸ் வேலை செய்த ஒருவருக்கு ஷாக் அடித்து கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற மற்ற பணியாளர்கள் உதவினர், அதைப் பார்த்த கருணாகரன், அவனுக்கு முதலுதவி எல்லாம் தேவையில்லை. அப்படியே விட்டாலே சரி ஆகிடுவான் எனக் கூறி அவரை மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல மறுத்தான்.
தீவிர சிகிச்சை
ஆனால், நேரம் ஆக ஆக அந்த நபர் எந்த உணர்சச்சியும் இல்லாமல் கிடந்தார். இதைப்பார்த்த மறஅற பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் இன்னும் கண் முழிக்காமல் உள்ளதாக கருணாகரனிடமும் மித்ராவிடமும் கம்பெனி ஊழியர் கூறினார்.
குற்ற உணர்ச்சி அற்ற கருணாகரன்
இதைக் கேட்ட ஆனந்தி, அவர் அங்கு படுத்த படுக்கையாக இருக்க காரணமே கருணாகரன் தான். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று திட்டினார். எப்படியும், மித்ரா கருணாகரனுக்கு சப்போர்ட் செய்து ஆனந்திக்கு எதிராக தான் நிற்பார் எனத் தெரிந்ததால், அங்கு வேலை செய்யும் அனைவரும் திட்டம் தீட்டி கருணாகரனை வழுக்கி விழ வைத்து அடிபட வைக்க எண்ணினர். அதை செய்தும் காட்டினர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்