வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 25 வயதாகும் இன்ஸ்டா பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
இன்ஸ்டா பிரபலமும், ஆர்ஜேவுமான சிம்ரன் சிங் தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது இறப்புக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாவில் பிரபலமான இன்ப்ளூயன்ஸரும், ஆர்ஜேவுமான 25 வயதாகும் சிம்ரன் சிங், குருக்கிராமில் உள்ள தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சிம்ரன் சிங்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமாக இருந்து வரும் சிம்ரன் சிங் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பலோயர்களை கொண்டுள்ளார். கடைசியாக டிசம்பர் 13ஆம் தேதி இன்ஸ்டாவில் தனது ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதையடுத்து சிம்ரன் சிங் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஜம்முவின் இதயத்துடிப்பு என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்ரன் சிங், பகுதி நேர ஆர்ஜேவாகவும் இருந்து வந்துள்ளார். அத்துடன் வேடிக்கையான ரீல்ஸ்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ள சிம்ரன் சிங், தனது இனிமையான குரலின் மூலம் பலரையும் ஈரக்ககூடியவராக இருந்துள்ளார்.