தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu Speech: எல்லாரும் போயிடுவாங்க.. ஆனால்.. இந்தியன் 2 விழாவில் ஓபனாக பேசிய சிம்பு!

Simbu Speech: எல்லாரும் போயிடுவாங்க.. ஆனால்.. இந்தியன் 2 விழாவில் ஓபனாக பேசிய சிம்பு!

Aarthi Balaji HT Tamil
Jun 02, 2024 12:02 PM IST

Simbu Speech: தாமதமாக வந்தேன் என்று நினைக்க வேண்டாம். தக் லைஃப் படப்பிடிப்பில் இருந்து நேரில் வந்தேன். சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் தான் தாமதமாக வந்தேன் என சிம்பு கூறினார்.

எல்லாரும் போயிடுவாங்க.. ஆனால்.. இந்தியன் 2 விழாவில் ஓபனாக பேசிய சிம்பு
எல்லாரும் போயிடுவாங்க.. ஆனால்.. இந்தியன் 2 விழாவில் ஓபனாக பேசிய சிம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். மேலும் கோலிவுட்டின் ட்ரெண்டான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன், சிம்பு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்

விழாவில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, “ தாமதமாக வந்தேன் என்று நினைக்க வேண்டாம். தக் லைஃப் படப்பிடிப்பில் இருந்து நேரில் வந்தேன். சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் தான் தாமதமாக வந்தேன்.

இந்தியன் படம் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை. அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்து உள்ளது. கண்டிப்பாக சங்கர் நமக்கு பிடிப்பது போல் தான் படம் செய்து இருப்பார். பெரிய படம் பண்ணுவது கஷ்டம்.

நம் உடன் இருப்பவர்கள் நம்மை விட்டு போய் சென்றுவிடுவார்கள். கூடவே இருப்பது உடம்பு மட்டும் தான். உடம்பை சரியாக வைத்து கொள்ள வேண்டும். அது எனக்கு தாமதமாக தான் புரிந்தது. உடம்பை விட்டுவிடாதீர்கள் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் “ என்றார்.

இந்தியன் எனக்கு ரொம்ப பிடித்த படம். கமர்ஷியல் படத்துக்கு ஒரு ஃபார்முலா வேண்டும் என்றால் இந்தியனுக்கு மேலே படம் இல்லை என்று தோன்றுகிறது.

இந்தியன் 2 குழு

இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், ஜெயராம், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜார்ஜ் மரியன் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரமண்டமான பொருட் செலவில் தயாரித்து உள்ளது.

இந்தியன் 2 அப்டேட்

’இந்தியன் 2’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கமல் ஹாசனை வைத்து மீண்டும் உருவாகிறது என அறிவிக்கப்பட்டது.

அதன் பின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன் பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தமாக அதன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்தியன் 2 ரிலீஸ்

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தது. எப்போது தான் படம் வெளிவரும் என ரசிகர்கள் ஒரு அளவில் காத்திருந்தார்கள்.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது படம் இறுதியாக ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்