ஷூட்டிங்கை நிறுத்துங்கப்பா..கமல் போட்ட உத்தரவு? சிம்பு ரசிகர்கள் கோபம்! சிம்பு 48 படப்பிடிப்பில் நடந்தது என்ன?
சிம்பு படத்தை தயாரிப்பதாக இருந்த உலகநாயகன் கமல்ஹாசன், திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம். இதற்கான காரணமும் தெரியவில்லை என கூறப்படும் நிலையில், அவர் மீது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாமல் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது படங்களை மட்டுமல்லாமல் பிற ஹீரோக்களின் படங்களையும் தயாரித்து வருகிறார்.
இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்திருக்கும் அமரன் படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து மேஜர் முகுந்த் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
சிம்பு படத்திலிருந்து கமல் விலகல்
அமரன் படம் உருவாகும்போதே சிம்புவை வைத்து புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். சிம்புவின் 48வது படமாக இது சிம்பு 48 என்று அழைக்கப்பட்ட நிலையில், படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் நடைபெற்று முடிந்திருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் தயாரிப்பில் இருந்து கமல்ஹாசன் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பின்னணி காரணம் எதுவும் தெரிவிக்காத நிலையில், இது கோலிவுட்டில் விவாதமாகியுள்ளது.
சிம்பு ரசிகர்கள் கோபம்
சிம்பு 48 படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவின் படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 48வது படம் என கூறப்படுகிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் சிம்பு 48 படம் பட்ஜெட் பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. இந்த படத்தின் பட்ஜெட் தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இப்படியொரு சூழ்நிலையில் படத்தை கைவிடாமல் தானே தயாரிக்க நடிகர் சிம்பு முடிவு செய்துள்ளாராம். இதற்கிடையே தனது தயாரிப்பில் உருவாகியிருக்கும் அமரன் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வரும் இந்த நேரத்தில் கமல்ஹாசன் இந்த சர்ச்சை குறித்து பேசுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளாராம்.
அடுத்தடுத்து புதிய படங்கள்
2021இல் வெளியான மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் சிம்பு, அதன் பின்னர் மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்தார். இதில் வெந்து தணிந்தது காடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. படத்தில் சிம்பு கேங்ஸ்டராக மிரட்டியிருப்பார்
இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் சிம்பு, அவரது தயாரிப்பிலும் புதிய படத்தில் நடித்து வந்தார். அத்துடன் ஓ மை கடவுளே அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்த படம் குறித்து கடந்த வாரம் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அடுத்தடுத்து அவரது புதிய படங்கள் உருவாகி வருகின்றன.
டாபிக்ஸ்