'சில்க்' பத்தி சொல்றது எல்லாம் உண்மையே இல்ல.. அவங்களோட திறம யாருகிட்டயும் இல்ல.. மேக்கப் ஆர்ட்டிஸ் கிருஷ்ண ராவ்
சில்க் பத்தி வெளிய சொல்ற தகவல் எல்லாம் உண்மை இல்லை என அவரிடம் மேக்அப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றிய கிருஷ்ண ராவ் பேசியுள்ளார்.
!['சில்க்' பத்தி சொல்றது எல்லாம் உண்மையே இல்ல.. அவங்களோட திறம யாருகிட்டயும் இல்ல.. மேக்கப் ஆர்ட்டிஸ் கிருஷ்ண ராவ் 'சில்க்' பத்தி சொல்றது எல்லாம் உண்மையே இல்ல.. அவங்களோட திறம யாருகிட்டயும் இல்ல.. மேக்கப் ஆர்ட்டிஸ் கிருஷ்ண ராவ்](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/28/550x309/silk_smitha_1_1735367947577_1735367959135.png)
நடிகை சில்க்... இந்த பெயரைக் கேட்டாலே உருகாத ஆண்கள் இல்லை. தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும், நடை, உடை, பாவணைகளாலும் ஆண்கள் மட்டுமல்ல பல பெண்களையும் தன் பக்கம் இழுத்தவர்.
17 வருஷத்தில் ஐந்து மொழிகளில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மட்டும் 400ஐ தாண்டும். ஆண்டுக்கு சராசரியாக 20 படங்கள். 1980களில் துவங்கி 1990களின் இறுதி வரை தமிழ் சினிமா உலகை தன்னை சுற்றி சுழல வைத்த நாயகி. 1980ல் நடிகரும், இயக்குநருமான வினு சக்கரவர்த்தியின் உதவியால் வண்டிச்சக்கரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அதிகம் நிறைவேறாத ஆசை
ஆனால் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்ற சில்க் ஸ்மிதாவின் கனவு மட்டும் இறுதி வரை பெரிதாக நிறைவேறவில்லை என்பதே உண்மை. முதல் படத்திலேயே சாராயம் விற்கும் பெண்ணாக சில்க் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜயலட்சுமி, ஸ்மிதா என தனது பெயரை மாற்றினாலும் முதல் படத்தில் அவருக்கு வைக்கப்பட்ட சில்க் என்ற பெயரும் அவருடன் ஒட்டிக் கொண்டது.
நல்ல சம்பளம்
அப்படிப்பட்ட நடிப்பு அரக்கியிடம் இருந்து வெளிவராத பல திறமைகளும் ரகசியங்களும் இன்றும் உள்ளது. அதைப்பற்றி மீடியா சர்கிள் யூடியூப் சேனலிடம் மனம் திறந்து பேசுகிறார் சில்க் ஸ்மிதாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிருஷ்ண ராவ்.
நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு சினிமா வாய்ப்பு குறைந்த காலகட்டத்தில் தான் நான் அவரிடம் வேலைக்கு போய் சேர்ந்தேன். அவரிடம் வேலை செய்த போதெல்லாம் நல்ல சம்பளம் தான் கிடைத்தது. ஆனால், நாளுக்கு நாள் பட வாய்ப்பு அவருக்கு குறையத் தொடங்கியது. அதனால் நானே அவரிடம் இருந்து வேலைவிட்டு நின்றேன். எனக்கும் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் சூழல் இருந்ததால் நானே தான் நின்றேன். இருந்தாலும் அவ்வப்போது படம் நடிக்க சென்றால் நான் அவருக்கு மேக்அப் போட செல்வேன்.
வாய்ப்பு எல்லாம் குறைஞ்சிருச்சு
சில்க் இறந்ததற்கு 3 வருடம் முன்பே நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன். அதனால் அவர் எப்படி இறந்தார் என்பது கூட தெரியவில்லை. செய்தியை கேள்விப்பட்டு தான் அவரது உறுதி அஞ்சலிக்காக சென்றேன்.
நான் சில்க் ஸ்மிதாவோட ஒரு 40 படம் தான் பண்ணி இருப்பேன். அவங்க எவ்வளவோ படம் பண்ணிருக்காங்க. நான் அவங்க கூட 3 வருஷம் தான் வேலை செஞ்சேன். அதுவும் பாட்டுக்கு மட்டும் தான் வேலை செஞ்சேன். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா வேலை செஞ்சது ரொம்ப கம்மி.
மன நிறைவா இருப்பாங்க
அவங்கள பர்செனலா பாத்தா அவங்க எல்லாம் தங்கம், வைரம் மாதிரி. அவ்ளோ சுத்தமானவங்க. அவங்க எப்போவும் மன நிறைவா இருப்பாங்க. வெளிய இருக்கவங்க கிட்ட ரொம்ப டெரரா இருந்தாலும் எங்ககிட்ட எப்போவும் ஜாலியா இருப்பாங்க.
அவங்க யாரையும் கண்டுக்க மாட்டீங்குறாங்கன்னு பலபேர் சொல்லுவாங்க. ஆனா, அவங்ககிட்ட பேச ஆரம்பிச்சுட்டா அவங்கள மாதிரி ஜாலியான ஆள் யாரும் இல்ல. நான் ஏன் எல்லார்கிட்டயும் ஃபிரண்ட் ஆகணும்ன்னு கேப்பாங்க. அவங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க. அவங்க வேலையில கரெக்டா இருப்பாங்க.
அந்த திறம பல பேர்கிட்ட இல்ல
அவங்ககிட்ட நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். கேரக்கடர் என்னென்னு சொல்லிட்டா போதும். அதுக்கான ட்ரெஸ் எல்லாம் அவங்களே வாங்கிருவாங்க. அவங்க ட்ரெஸ் எப்படி இருக்கணும்ன்னு அவங்களே டிசைன் பண்ணுவாங்க. அந்த கலர் காம்பினேஷன் எல்லாம் அவங்க அளவுக்கு யாராலையும் கரெக்ட்டா சொல்ல முடியாது.
ஷீட்டிங் இல்லாத டைம்ல எல்லாம் சில்க் ஸ்மிதா வேலை செய்றவங்ககிட்ட எல்லாம் பயங்கர ஜாலியா இருப்பாங்க. கிண்டல் பண்ணுாங்க. ஆனா ஷூட்டிங் போயிட்டாங்கன்னா அந்த கேரக்டர்ல இருந்து அப்படியே மாறிடுவாங்க.
வேலய பாருங்க மிஸ்டர்
ஆனா, அவங்க எப்போவும் பர்செனல் விஷயத்த எல்லாம் ஷேர் பண்ண மாட்டாங்க. நியூஸ்ல உங்கள பத்தி நிறைய தப்பு தப்பா சொல்றாங்களேன்னு கேட்போம். அப்போ அவங்களுக்கு என்ன வேல பேப்பர ஃபில் பண்ண எதையாவது எழுதுவாங்க. போய் உங்க வேலையப் பாரு மிஸ்டர் அப்டின்னு சொல்லுங்க. ஷூட்டிங் டைம்ல அவங்களோட குடும்பம் எல்லாம் யாரும் வரமாட்டாங்க. அவங்களோட டாக்டர் இல்லன்னா நான் மட்டும் தான் போவேன். நான் அவங்ககிட்ட சாப்டுருக்கேன். அந்த மரியாதை எப்போவும் இருக்கும். அவங்க இறந்தப்போவும் அந்த மரியாதை இருந்தது என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்