THUG LIFE : மாஸ் லுக்கில் STR.. ’தக் லைஃப்' படத்தில் சிலம்பரசன் - ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்த படக்குழு!
THUG LIFE : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில் சிலம்பரசன் இருப்பதை ப்ரோமோ வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.
36 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி
இதன்மூலம், தக் லைஃப் படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு உருவாக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக இருந்துவருகிறது.
மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, நாயகன் படத்தைக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகவுள்ள ‘தக் லைஃப்’படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தக் லைஃப் படத்தின் முதல் செட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது செட்யூல் செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் நடித்து வந்த துல்கர் சல்மான், திடீரென கால்ஷீட் பிரச்னைகளால், லக்கி பாஸ்கர் என்னும் தெலுங்கு படத்தில் முழுமையாக நடித்து வருகிறார். இதனால், அந்த இடத்தில் துல்கார் சல்மானுக்குப் பதிலாக, சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார், மணிரத்னம்.
சிம்புவின் ஜோடியாக திரிஷா?
இப்படத்தின் சூட்டிங்கிற்காக சிம்பு, ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகருக்குச் சென்றிருக்கிறார். கடும் வெயிலிலும் வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் சிம்பு நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. மேலும் படத்துக்காக, சிம்பு நீண்ட முடி வளர்த்து இருக்கிறார். இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பின், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று டெல்லியின் சங்கட் மோச்சன் ஹனுமான் கோயில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
Thug life அப்டேட்
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தக் லைஃப் படத்தின் புதிய ப்ரோமோ இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி, தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் Thug life படத்தில் சிம்பு இருப்பதை ப்ரோமோ வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இதில் சிம்பு மாஸ் லுக்கில் காரில் அமர்ந்து சன்கிளாஸ் போட்டு கொண்டு கையில் கன் வைத்து கொண்டு சுடுவது போல காட்சி உள்ளது.
சிம்பு, சமீபத்தில் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். 2021ஆம் ஆண்டு மாநாடு, 2022ஆம் ஆண்டு வெந்து தணிந்தது காடு, 2023ஆம் ஆண்டு பத்து தல ஆகிய மூன்று படங்களும் கலெக்ஷனில் கல்லா கட்டின. அதில் முதல் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டி, வசூல் செய்தது. இண்டாவது படம் 85 கோடி ரூபாயும், மூன்றாவது படமான பத்து தல, 55 கோடி ரூபாயும் வசூலித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்