Sikandar : ‘அப்பா… கட்டப்பா..’ அறிமுகம் செய்த சல்மான் கான்.. நெகிழ்ந்து போன சத்யராஜ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sikandar : ‘அப்பா… கட்டப்பா..’ அறிமுகம் செய்த சல்மான் கான்.. நெகிழ்ந்து போன சத்யராஜ்!

Sikandar : ‘அப்பா… கட்டப்பா..’ அறிமுகம் செய்த சல்மான் கான்.. நெகிழ்ந்து போன சத்யராஜ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 24, 2025 11:42 AM IST

பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், சல்மான் கானின் 'சிகந்தர்' படத்தில் வில்லனாக நடிக்கிறார். சல்மானை விட சலீம் கானை சந்தித்ததில் அவருக்கு அதிக மகிழ்ச்சி என்று, அவர் தெரிவித்துள்ளார்.

Sikandar : ‘அப்பா… கட்டப்பா..’ அறிமுகம் செய்த சல்மான் கான்.. நெகிழ்ந்து போன சத்யராஜ்!
Sikandar : ‘அப்பா… கட்டப்பா..’ அறிமுகம் செய்த சல்மான் கான்.. நெகிழ்ந்து போன சத்யராஜ்!

சல்மான் கான் எப்படி அறிமுகப்படுத்தினார்?

டிரைலர் வெளியீட்டு விழாவில், ‘சலீம் சாரை சந்தித்ததுதான் இன்று எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம். சாப் (சல்மான்) என்னை அறிமுகப்படுத்தினார், ’அப்பா.. கட்டப்பா'ன்னு என்னை அறிமுகப்படுத்தினார். கல்லூரியில் படிக்கும் போதே சலீம்-ஜாவேத் சாஹப் எத்தனையோ நடிகர்களின் வாழ்க்கையை தங்கள் ஸ்கிரிப்ட் மூலம் உயர்த்தியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' என்று சத்யராஜ் கூறினார். 'சிகந்தர்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நன்றி என்று சத்யராஜ் கூறினார்.

சல்மானை விட சலீமை சந்தித்ததில் அதிக மகிழ்ச்சி

பாகுபலி மற்றும் பாகுபலி-2 படங்களில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், 'சல்மான் சாரை சந்தித்ததை விட சலீம் சாரை சந்தித்தது எனக்கு பெரிய வாய்ப்பு. 47 வருஷமா இந்தத் துறையில் இருக்கேன், 258 படங்கள் நடிச்சிருக்கேன். காமெடி வில்லனாத்தான் என்னோட கெரியர் ஆரம்பிச்சது. பிறகு ஹீரோ ஆனேன், 100 படங்கள் நடிச்சிருக்கேன்' என்றார். முருகதாஸ் சார் மீண்டும் என்னை காமெடி வில்லனா நடிக்க வைச்சிருக்கார் என்று சொன்னார்.

ஷர்மன் ஜோஷி மற்றும் காஜல் அகர்வால் என்ன சொன்னாங்க?

முன்னாடி நான் இது மாதிரி கேரக்டர்ல நடிச்சப்போ அது ஒரு ட்ரெண்ட் செட்டரா மாறிடுச்சு. இப்பவும் இது மாதிரி நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சத்யராஜ் கூறினார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காஜல் அகர்வால், 'இவ்வளவு பெரிய படத்துல, இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டோட நடிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். எத்தனை படம் நடிச்சிருக்கோம்ன்னு விஷயம் இல்ல, எப்பவும் உற்சாகமாத்தான் இருக்கும்'ன்னு சொன்னார். ஷர்மன் ஜோஷி, சல்மான் பத்தி கேள்விப்பட்டதை எல்லாம் படப்பிடிப்புல உணர்ந்தேன் என்று அவர் கூறினார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.