தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sidhu Shreya Latest Interview About The Unforgettable Thing That Happened Between Them In Kodaikanal

Sidhu Shreya: கொடைக்கானலில் திடீரென்று வந்த பீரியட்ஸ்.. நாப்கினும் இல்லை.. - சித்து செய்த உதவி.. நெகிழ்ந்த ஸ்ரேயா!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 10, 2024 12:12 PM IST

எங்களது வீட்டிலேயே நாங்கள் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து விடும் என்றுவிட்டுவிட்டார்கள். இப்போது நாங்கள் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

சித்து ஸ்ரேயா நேர்காணல்
சித்து ஸ்ரேயா நேர்காணல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களது மணவாழ்க்கை, குழந்தை, மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளிட்ட பலவை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கின்றனர்.

அவர்கள் பேசும் போது, “லவ் பண்ணும் பொழுது எப்போது கல்யாணம் எப்போது கல்யாணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கல்யாணம் முடிந்த பின்னர் எப்போது குழந்தை என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள். 

குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தை எப்போது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். எங்களுக்கு தெரிந்த ஒரு அம்மா ஒருவர் இருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் சூர்யா ஜோதிகா குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், ரன்பீர் கபூர் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்து என்னை இருந்தாலும் ஆசை இருக்கும் அல்லவா என்று கேட்பார்.

எங்களது வீட்டிலேயே நாங்கள் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து விடும் என்றுவிட்டுவிட்டார்கள். இப்போது நாங்கள் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். ” என்றனர்.

ஸ்ரேயா பேசும் போது, “அண்மையில் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தேன்.இதனையடுத்து அனைவரும் குழந்தை எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றிற்கும் நேரம் என்ற ஒன்று வரும்.” என்றார் 

மேலும் பேசிய அவர், “மாதவிடாய் காலங்களில் நமக்கு எதற்கு கோபம் வரும் என்றே தெரியாது. நம்முடைய மூடானது மாறி கொண்டே இருக்கும். என்னுடைய வீட்டில் கூட யாரும் அதை பெரிதாக புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் என்னை இவர் அந்த சமயத்தில் அழகாக புரிந்து கொள்வார். 

என்னுடைய தேவைகள் அனைத்தையும் தெரிந்து, அதற்கேற்றவாறு நடந்து கொள்வார். கல்யாணம் ஆவதற்கு முன்பதாக நாங்கள் கொடைக்கானலுக்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தோம். அந்த இடத்தில் பெரிதாக வசதிகள் ஏதுமில்லை. திடீரென்று எதிர்பார்க்காத நேரத்தில் பீரியட்ஸ் வந்து விட்டது. நான் நாப்கினை கூட எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். வயிறும் கடுமையாக வலித்துக்கொண்டிருந்தது. 

அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த லொகேஷனை விட்டு உடனடியா செல்ல முடியாது. அப்படி செல்ல வேண்டுமென்றால், ஒரு மணி நேரம் பயணம் செய்து தான் அடுத்த இடத்திற்கு செல்ல முடியும்.

அப்போது அந்த விஷயத்தை என்னாலும் யாரிடமும் சொல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இவர் எனக்காக சில விஷயங்களை செய்து உதவி செய்தார். அப்போது நான் இவரை நல்ல பையனாக இருக்கிறானே என்று நினைத்தேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்