Siddharth: ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்? திருமணம் தேதி எப்போது? - வெளிப்படையாக பதில் சொன்ன சித்தார்த்
நடிகர் சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரியுடனான தனது நிச்சயதார்த்தம் குறித்து வெளிப்படையாக பேசினார்.

சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி
நடிகர் சித்தார்த்த, அதிதி ராவ் ஹைதாரி சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்த ஒரு தனியார் விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.
அதற்கு முன்னதாக அவர்கள் தெலுங்கானாவில் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவிய நிலையில் இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் அந்த செய்தி தொடர்பாக ஷாக்கான தகவலை வெளியீட்டார்கள்.
இதனிடையே கலாட்டா கோல்டன் ஸ்டார்ஸ் நிகழ்வில் அதிதி ராவ் ஹைதாரியுடன் ஏற்பட்ட திடீர் நிச்சயதார்த்தம் தொடர்பாக நடிகர் சித்தார்த் வெளிப்படையாகப் பேசி உள்ளார்.
