Siddharth: ‘தொப்புளக் கிள்ளுறது.. பெண்களை அடிக்கிறதுன்னு.. யெஸ் சொல்லியிருந்தா பெரிய ஸ்டார் ஆகிருப்பேன்’ -சித்தார்த்
Siddharth: என்னிடம் பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்களை படத்தில் வைப்பது. தொப்புளைக் கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று சொல்வது தொடர்பான பல கதைகள் என்னிடம் வந்தன. - சித்தார்த்

ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சித்தார்த் விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவர் திரைப்படங்கள், புத்தகங்கள் மீதான தன்னுடைய காதல் மற்றும் பலவற்றைக் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, தான் சில திரைப்படங்களுக்கு யெஸ் சொல்லி இருந்தால் பெரிய நட்சத்திரமாக மாறியிருக்கலாம் என்று கூறினார்
தொப்புளைக் கிள்ளுவது
இது குறித்து அவர் பேசும் போது, ‘ என்னிடம் பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்களை படத்தில் வைப்பது. தொப்புளைக் கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று சொல்வது தொடர்பான பல கதைகள் என்னிடம் வந்தன.
அவற்றில் சிறந்த கதை இருந்தால், சிறந்த முறையில் எடுக்கப்பட்டிருந்தால் அவை வெற்றிக்கரமான படங்களாக மாறியிருக்கும். ஆனால் நான் அதனை நிராகரித்தேன். நான் வித்தியாசமாக இருந்திருந்தால் நான் பெரிய நட்சத்திரமாக மாறியிருப்பேன். ஆனால், நான் இயல்பாகவே எனக்குப் பிடித்ததைச் செய்தேன்.” என்று பேசினார்.
பெண்களை மதித்தீர்கள்
மேலும் பேசிய அவர், ‘நீங்கள் பெண்களை மதித்தீர்கள், பெற்றோர்களிடம் நல்லவராக இருந்தீர்கள், குழந்தைகளுடன் நன்றாக இருந்தீர்கள், நீங்கள் அழகாக இருந்தீர்கள் என்று மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தைகள் 15 வருடங்களுக்கு முந்தைய எனது படங்களை பார்க்கிறார்கள்.
இது ஒரு மகிழ்ச்சியான உணர்வு; இது கோடிகளில் அளவிடக்கூடிய ஒன்றல்ல. என்னைச் சுற்றியுள்ள அனைவரும் ஆக்ரோஷமாகவும் ஆண்மையுடனும் இருக்க முயற்சித்தனர். அவர்கள் அனைவரும் ஆண்களின் வலியை உணராத வகையைச் சார்ந்தவர்கள். நான் திரையில் அழுவதில் மகிழ்ச்சியாக இருந்தேன்.
கடைசியாக சித்தார்த் நடிப்பில் மிஸ் யூ திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தப்படத்தில் சித்தார்த் உடன் ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ள இயக்குநர் என்.ராஜசேகர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். டிசம்பர் 13 ம் தேதி வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அந்தப்படத்தின் பத்திரிகையாளர்களை சந்தித்த சித்தார்த், ‘ சித்தார்த் பேசும் போது, " நான் தமிழ் சினிமாவில் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் நடித்த சித்தா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் நான் கமல் சார் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தேன்.
அந்த படம் உங்களுக்கு படமாக தெரியவில்லையா?.. அந்தத் திரைப்படம் பற்றி நீங்கள் தான் பேசவில்லை. என்னுடைய வீட்டில் அது பற்றி நிறைய பேசினார்கள். கமல் சார் உடனே நடித்து விட்டாய் ஷங்கர் சார் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து விட்டாய் என்றெல்லாம் பாராட்டினார்கள். நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்