OTT Releases: நஸ்ரியா பிளாக் காமெடி த்ரில்லர்.. சித்தார்த் மிஸ் யூ.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்
OTT Releases This Week: நஸ்ரியா பிளாக் காமெடி த்ரில்லர் படம், சித்தார்த் நடித்த மிஸ் யூ, த்ரில்லர் வெப் சீரிஸ் உள்பட இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்

இந்த ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். பெங்கல் ரிலீஸ் படங்களில் முதல் கட்டமாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர மேலும் சில படங்களும் அடுத்தடுத்த நாள்களில் வெளியாக இருக்கின்றன.
இதற்கிடையே பொங்கல் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க இந்த வாரம் பிரபல ஓடிடியிலும் சில படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் ஓடிடிகளில் வெளியாகியிருக்கும் படங்களின் லிஸ்டை பார்க்கலாம்
மிஸ் யூ
சித்தார்த் - ஆஷிகா ரங்கநாத் நடித்து ரெமாண்டிக் திரைப்படமாக வெளியான மிஸ் யூ வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் மிஸ் ஆன படமாகவே உள்ளது. ராஜசேகர் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலை குவிக்கவில்லை. புஷ்பா 2 படத்துடன் இணைந்து வெளியாவதாக இருந்த படம் தள்ளிப்போன நிலையில், தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.