8 Years of Jil Jung Juk: எதிர்காலத்தில் நடக்கும் பீரியட் கதை! ஹீரோயினே இல்லாமல் தமிழ் சினிமாவில் வெளிவந்த படம்
தமிழ் சினிமாவில் ஹீரோயின் இல்லாமலும் எடுக்கப்பட்ட படமாக ஜில் ஜங் ஜக் உள்ளது. அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் நடக்கும் கதையம்சத்தில் வெளியான முதல் முழு நீள படமாகவும் உள்ளது.
பொதுவாக பீரியட் படங்கள் என்றால் கதைகளமானது அப்போது இருக்கும் காலத்துக்கு சில ஆண்டுகள் முன்னர் நடப்பதாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் கதையானது எதிர்காலத்தில் நடக்கும் கதையாக அமைந்திருக்கும்.
அப்படி பார்க்கையில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சியாக இந்த படம் அமைந்திருந்தது. படத்தின் கதாபாத்திரங்கள் வெளிப்ப்டும் சீரியஸ் விஷயங்கள் சிரிப்பை வரவழைக்கும் அவல நகைச்சுவை படமாகவே இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். பட்டர்ப்ளை எஃபெக்ட், எதிர்காலத்தை மையப்படுத்திய கற்பனையுடன் இருக்கும் இந்த படத்தில் ஹீரோயின் கிடையாது. அதுமட்டுமில்லாமல் ஒரேயொரு பெண் கதாபாத்திரமாக ஜாஸ்மின் பாசின் மட்டும் நடித்திருப்பார்.
அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், அவினாஷ் ரகுதேவன், சனத் ரெட்டி படத்தின் டைட்டில் கதாபாத்திரமாக ஜில், ஜங், ஜக் ஆகிய பெயர்களில் வருவார்கள். நாசர், ராதாரவி, பகவதி பெருமாள், சாய் தீனா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றுவதற்காக இரண்டு கேங்குகளுக்கு இடையே நிகழும் மோதலும், இதில் ஹீரோவான சித்தார்த் கேங்கும் இணைந்து கொள்ள அதனால் நிகழும் திருப்பங்களும் தான் படத்தின் ஒன்லைன்.
ஆஃப் பீட் என சொல்லப்படும் வித்தியாச முயற்சியாக இருந்த இந்த படத்தின் கிரியேட்டிவான மேக்கிங்குக்கு விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்றது. படத்துக்காக பிரத்யேக் செட் அமைக்கப்பட்டு 38 நாள்களில் எடுத்து முடிக்கப்பட்டது.
என்னதான் எதிர்கால கதையாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடியாக கரகாட்டக்காரன் படத்தில் வரும் செப்பனசுந்தரி, சிவப்பு நிற செவ்ரோலெட் இம்பாலா கார் கனெக்ஷன் ஒன்றையும் வைத்திருப்பார்கள்.
படத்துக்கு விஷால் சந்திரசேகம் இசையமைத்திருப்பார். இதில் ஷுட் தி குருவி என்ற பாடல் வைரல் ஆனது. பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக ஆக்கும் விதமாக இருக்கும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல், தமிழ் சினிமாவில் அரிதாக நடக்கும் வித்தியாச முயற்சியாக வெளிவந்து பெரிய வசூலை குவிக்காவிட்டாலும், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஜில் ஜங் ஜக் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்