Sibi Sathyaraj: 'குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. மணிகண்டன் பண்ணத யாருமே’ - சத்யராஜின் மகன் பேட்டி!
Sibi Sathyaraj: தொகுப்பாளர் முழுக்க, முழுக்க கோயம்புத்தூர் பாஷையில் காமெடி கலந்து எப்போது படம் நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு சிபி சத்யராஜ் அளித்த பதில் இங்கே

Sibi Sathyaraj: தமிழ் சினிமாவில் கவனமிகு நடிகராக வலம் வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, சத்யா, ஜாக்சன் துரை, கபடதாரி, வால்ட்டர் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ‘டென் ஹவர்ஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். ஆக்ஷன் கலந்த க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.
கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார். இப்படம் வருகிற ஏப்ரல் 18 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் தொடர்பான புரோமோஷனில், சினிமா விகடனுக்கு பேட்டியளித்த நடிகர் சிபி மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற குடும்பஸ்தன் திரைப்படத்தை மிஸ் செய்த கதையை பகிர்ந்தார். அந்தப்பேட்டியில் தொகுப்பாளர் முழுக்க, முழுக்க கோயம்புத்தூர் பாஷையில் காமெடி கலந்து எப்போது படம் நடிப்பீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிபி ‘சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படத்தின் கதையை எனக்கு முன்னமே தெரியும். அந்தப்படத்தின் கதை எனக்கும் வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியாமல் சென்று விட்டது.
அந்தப்படத்தை பார்க்கும் போது கோயம்புத்தூர் பாஷை என்பதைத்தாண்டி, அந்த கதைக்கு மணிகண்டன் கொடுத்த நியாயமான நடிப்பை வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது. அந்தப்படக்குழுவிற்கு என்னுடைய பாராட்டுகள். அந்தப்படத்தை பார்த்து முடித்த போது, எனக்கு கோயம்புத்தூருக்கே சென்று வந்தது போல இருந்தது’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்