உங்களை அழ வைத்ததற்கு மன்னிச்சிடுங்க.. மிஸ் ஆகிடுச்சு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உங்களை அழ வைத்ததற்கு மன்னிச்சிடுங்க.. மிஸ் ஆகிடுச்சு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ!

உங்களை அழ வைத்ததற்கு மன்னிச்சிடுங்க.. மிஸ் ஆகிடுச்சு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ!

Divya Sekar HT Tamil
Jan 10, 2025 09:39 AM IST

Shrutika : பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஸ்ருதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். என்னால் முடிந்த வரை சிறப்பாகவே விளையாடினேன். ஆனால், எதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது என பேசியுள்ளார்.

உங்களை அழ வைத்ததற்கு மன்னிச்சிடுங்க.. மிஸ் ஆகிடுச்சு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ!
உங்களை அழ வைத்ததற்கு மன்னிச்சிடுங்க.. மிஸ் ஆகிடுச்சு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ!

ஹிந்தியில் பிக்பாஸ் 18வது சீசனுடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமும் ஆன ஸ்ருதிகா போட்டியாளராக கலந்து சிறப்பாக விளையாடி இருந்தார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஹிந்தி பிக்பாஸ் இல் கலந்து கொண்டார். இவருக்காக பல தமிழ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியினை பார்த்து வந்தனர்.

இவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிதில் அவரது நடவடிக்கைகளையும் பேச்சையும் பலரும் கிண்டல் செய்து வந்தனர். அத்துடன் இவர் மிகவும் போலியானவர். வீட்டில் உள்ளவர்களிடம் நடித்து வருகிறார் என்றனர். பின், அவர் தமிழர் எனவும், அவரது மொழி மற்றும் உச்சரிப்பு குறித்தும் கிண்டல் செய்து வந்தனர். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம்

ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஹிந்தி பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியிலும் அவர் நல்ல மரியாதையை பெற்றார்.நடிகையான ஸ்ருதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனையடுத்து திருமணமாகி செட்டிலாகிவிட்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் அவரது சேட்டைகள், குறும்புத்தனங்கள் சல்மான் கான் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் 18 இல் 90 நாட்கள் கலந்துகொண்ட இவர் கடந்த வாரம் எலிமினேஷன் ஆனார். இவர் எலிமினேஷன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஒரு வாரத்திற்கு ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஸ்ருதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நம் ஊரில் மட்டுமல்லாது, அமெரிக்காவில் இருந்தும் கூட எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா, என்னை கஷ்டப்பட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். டைட்டில் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். என்னால் முடிந்த வரை சிறப்பாகவே விளையாடினேன். ஆனால், எதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது.

நிகழ்ச்சியில் நான் அழுததை பார்த்து நிறையபேர் அழுதிருக்கிறீர்கள். உங்களை அழ வைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் ஆதரவுதான் எனக்கு பெரிய நம்பிக்கை. அனைவருக்கும் நன்றி” என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.