Shrutika: எதிர்பாராமல் எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ருதிகா அர்ஜுன்.. 13 வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெற்ற சம்பளம் எவ்வளவு?
Shrutika Arjun Salary: பைனலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மிட் வீக்கில் எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ருதிகா அர்ஜுன், பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் 94 நாள்கள் தாக்கு பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதேபோல் இந்தி பிக் பாஸ் 18 நிகழ்ச்சியும் இறுது வாரத்துக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகையான ஸ்ருதிகா அர்ஜுன் போட்டியாளராக பங்கேற்றார். இந்தி பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்தவரான ஸ்ருதிகா பங்கேற்று ஆச்சர்யப்படுத்தியதுடன், கடுமையான போட்டியாளராகவே வலம் வந்தார்.
ஆரம்பத்தில் ஸ்ருதிகாவின் செயல்பாடு ஓவர் ஆக்டிங்காக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், பின்னர் அவரது செயல்பாடு, டாஸ்குகளில் வெளிப்படுத்தும் பங்களிப்பு, அவரது இயல்பு தன்மை ரசிகர்களை கவர தொடங்கியது. தமிழில் ஓவியாவை போல் இந்தி பிக் பாஸில் ஸ்ருதிகாவுக்கு என தன ரசிகர்கள் கூட்டமும் உருவானது.
மிட் வீக் எலிமினேஷன்
பல்வேறு கடினமான போட்டிகளையும், போட்டியாளர்களையும் எதிர்கொண்டு 13 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நின்ற ஸ்ருதிகா இறுதி வாரம் வரை தன்னை வீட்டிலேயே தக்க வைத்து கொண்ட நிலையில், இந்த சீசனின் பைனலிஸ்ட்களில் ஒருவராக இணைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், திடீர் டுவிஸ்டாக மிட் வீக் எலிமினேஷனில் ஸ்ருதிகாபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாரும் எதிர்பார்த்திராத நிலையில்ஸ்ருதிகாவின் இந்த வெளியேற்றம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து ஸ்ருதிகாவின் எலிமினேஷன் நியாமற்றது, அவர் கண்டிப்பாக பைனலிஸ்ட் லிஸ்டில் இடம்பெற தகுதியானவர் என பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
என்னை மன்னித்து விடுங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா அர்ஜுன், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நம்ம ஊரில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எனக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு எப்படி நன்றி சொல்வது என எனக்கு தெரியவில்லை
எங்க அப்பா இந்த நிகழ்ச்சிக்கு என்ன ரொம்ப கஷ்டப்பட்டு தான் அனுப்பி வச்சாரு. நானும் நல்லா விளையாடனும் என்று நினைத்தேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி இருக்கிறேன். அதே நேரம் நான் அழுததை பார்த்து பலர் கண்கலங்கியதாக கூறினார்கள். உங்களை அழ வைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என கூறியுள்ளார்.
அத்துடன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறந்த தருணங்களுடன் கூடிய விடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், "அவளுடைய சக்தி, கருணை மற்றும் ஆற்றலுக்கு எல்லையே இல்லை! அவளை யார் தொந்தரவு செய்ய நினைத்தாலும், சரியான நேரத்தில் திரும்பப் பெறுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு
பிக் பாஸ் 18 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களில் ஒருவராக ஸ்ருதிகா என ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் பெரிதாக எதுவுமே செய்யாமல் இருந்த ஷில்பா ஷிரோத்கருடன் ஒப்பிடுகையில் ஸ்ருதிகா போட்டியில் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தியிருப்பாதக கூறப்படுகிறது.
ஆழமான டாஸ்குகள், விளையாட்டுகள், சரியான உத்திகள் என கலக்கி வந்த ஸ்ருதிகா, நிகழ்ச்சியின் போது உணர்ச்சி ரீதியாக பல்வேறு மகிழ்ச்சி மற்றும் துயரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரங்கள், 3 நாள்கள் வரை நீடித்து மிட் வீக் எவிக்ஷனாக வெளியேற்றப்பட்ட ஸ்ருதிகா வாரத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை சம்பளம் பெற்றுதாகவும், 94 நாள்கள் வரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ரூ. 20 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்ருதிகா படங்கள்
மறைந்தா காமெடி மற்றும் குணச்சத்திர நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா அர்ஜுன், டீன் ஏஜ் வயதிலேயே தமிழில் சூர்யா ஜோடியாக ஸ்ரீ என்ற படத்தில் நடித்தார். இதன் பின்னர் ஆல்பம், நளதமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்த இவர் திருமணமாகி செட்டிலானார்.
2022இல் குக் வித் கோமாளி ஷோ மூலம் மீண்டு கம்பேக் கொடுத்த இவர், தொடர்ந்து பல்வேறு விஜய் டிவி ஷோக்களில் பங்கேற்றார். தற்போது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி வரை சென்று புகழ் பெற்றுள்ளார்.
தொடர்புடையை செய்திகள்