‘அப்பா லென்ஸ் வழியாதான் அவர பார்த்தேன்.. ரஜினி சார் புத்திசாலி மட்டுமல்ல’ - ஸ்ருதிஹாசன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அப்பா லென்ஸ் வழியாதான் அவர பார்த்தேன்.. ரஜினி சார் புத்திசாலி மட்டுமல்ல’ - ஸ்ருதிஹாசன் பேட்டி!

‘அப்பா லென்ஸ் வழியாதான் அவர பார்த்தேன்.. ரஜினி சார் புத்திசாலி மட்டுமல்ல’ - ஸ்ருதிஹாசன் பேட்டி!

HT Tamil HT Tamil Published Jul 11, 2025 01:00 PM IST
HT Tamil HT Tamil
Published Jul 11, 2025 01:00 PM IST

நான் அவரைச் சுற்றியே வளர்ந்திருப்பேன் என்று மக்கள் நினைக்கிறார்கள்.ஆனால், நானும் அவரை மக்கள் பார்க்கும் அதே லென்ஸ் வழியாகதான் அறிந்திருந்தேன். நான் அவரை சூப்பர் ஸ்டாராக அறிந்திருந்தேன். என் அப்பாவின் லென்ஸிலிருந்து அவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன். - ஸ்ருதிஹாசன் பேட்டி!

Shruti Haasan worked with Rajinikanth on Lokesh Kanagaraj’s Coolie.
Shruti Haasan worked with Rajinikanth on Lokesh Kanagaraj’s Coolie.

இந்த நிலையில் அவர் கூலி படத்தில் ரஜினிகாந்துடன் பணிபுரிந்தது குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து ரன்வீர் அலகாபாடியா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘ "ரஜினிகாந்தும் எனது தந்தையும் (கமல்ஹாசனும்) தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள் மற்றும் முகங்கள்.

புத்திசாலியாக இருக்கிறார்.

நான் அவரைச் சுற்றியே வளர்ந்திருப்பேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நானும் அவரை மக்கள் பார்க்கும் அதே லென்ஸ் வழியாகதான் அறிந்திருந்தேன். நான் அவரை சூப்பர் ஸ்டாராக அறிந்திருந்தேன். என் அப்பாவின் லென்ஸிலிருந்து அவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

ஆனால், படப்பிடிப்புத்தளத்தில் தொழில் ரீதியாக அவரை அறிந்து கொள்வது மிகவும் சுவாரசியமானது. அவரின் குணாதியங்கள் தனித்துவமான கலவை. அவர் புத்திசாலித்தனமாகவும், கூர்மையாகவும் இருக்கிறார். அவரிடம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

இதை நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன். அவர் மிகவும் நல்லவர். அவர் தனக்கான ஈர்ப்பை சுமந்து கொண்டே அலைவதில்லை. படப்பிடிப்புத் தளத்திலும் அவர் நல்ல எனர்ஜியை கொண்டு வருகிறார். அவருடன் பணிபுரிவதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.’ என்று பேசினார்.