Shruti Haasan: ‘ஆமா..நான் சிங்கிள்தான் போதுமா.. மிங்கிளாக ரெடியா இருக்கேன்’ - கொந்தளித்த ஸ்ருதிஹாசன்
Shruti Haasan: “நான் என்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக்கொண்டிருக்கிறேன்.. போதுமா” - கொந்தளித்த ஸ்ருதிஹாசன்
Shruti Haasan: நடிகை ஸ்ருதிஹாசன் தான் சிங்கிளாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் இன்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவரது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் குறித்து கேட்டார்.
கோபமான ஸ்ருதிஹாசன்:
அதற்கு கோபமான ஸ்ருதிஹாசன், “ இந்தக்கேள்விக்கு பதிலளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லைதான். ஆனால்... நான் இப்போது சிங்களாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன். நான் என்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக்கொண்டிருக்கிறேன்.. போதுமா” என்று பேசினார். இதன் மூலம் அவர், தன்னுடைய பாய் ஃப்ரண்டும், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவுடனான உறவை முறித்துக்கொண்டது உறுதியாகி இருக்கிறது.
யார் இந்த ஸ்ருதிஹாசன்?
நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினரின் மூத்தமகள் ஆவார். 38 வயதாகும் ஸ்ருதிஹாசன் 2011ஆம் ஆண்டு, வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின், 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகியப் படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இதற்கிடையே, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியான சுருதிஹாசன், அனகனகா ஓ தீரடு, ஓ மை ஃபிரெண்ட், கபர் சிங், பலுப்பு, ராமய்யா வஸ்தவ்வய்யா, எவடு, ரேஸ் குர்ரம், அகடு, ஸ்ரீமந்துடு, பிரேமம் (தெலுங்கு), கிராக், பிட்ட கதைலு, வக்கீல் ஷாப், வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா, ஹாய் நானா, சலார் பார்ட் 1 ஆகியப் படங்களில் நடித்தார்.
சாந்தனு ஹசாரிகாவுடன் காதல்:
நடிகை ஸ்ருதி ஹாசன், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஸ்ருதி ஹாசனுடன், அவர் லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார். இது கமல்ஹாசனுக்கும் தெரியும். இருப்பினும், தனது மகளின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடாத தந்தையாகவே இருந்து வந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரேக் அப் செய்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. அதனை உறுதிபடுத்தும் விதமாக, இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்தனர். கூடவே, தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களையும் நீக்கி இருந்தனர்.
என்ன பிரச்சினை:
இது குறித்து விசாரித்த போது, அவர்கள் கடந்த மாதமே பிரிந்து விட்டதாகவும், தனிப்பட்ட கருத்துகளில் இருந்த முரண்பாட்டால், இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்ததாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் இந்த செய்தியை உறுதிபடுத்த, சாந்தனுவை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டது. அதற்கு சாந்தனு, “ என்னை மன்னித்து விடுங்கள். இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்