தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shruthi Raj Opens Why Marriage Was Not Happened After Crossing 40 Years

Shruthi Raj: 40 வயதை கடந்த ஸ்ருதி ராஜ்.. திருமணத்திற்கு சம்மதம் சொல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

Aarthi Balaji HT Tamil
Mar 22, 2024 05:30 AM IST

Shruthi Raj Marriage: நடிகை ஸ்ருதி ராஜ் 40 வயதை கடந்தும் தான் எதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி உள்ளார்.

ஸ்ருதி ராஜ்
ஸ்ருதி ராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை ஸ்ருதி ராஜ், தமிழ் சீரியல் திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட வெற்றித் தொடர்களில் ஸ்ருதி ராஜ் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி பார்வையாளர்களின் விருப்பமானவராக மாற்றி உள்ளது. ஸ்ருதி ராஜ் படங்களில் நடித்த பிறகு சீரியல்களில் கவனம் செலுத்ட்க ஆரம்பித்துவிட்டார்.

ஸ்ருதி ராஜ் தமிழ் மொழி மட்டுமில்லமல் ஒரு சில மலையாளப் படங்களிலும் நடித்து உள்ளார். மான்புமிகு மானவன், இனி எல்லாம் சுகமே, மந்திரன், ஜெர்ரி, காதல் டாட் காம் போன்ற படங்களில் எல்லாம் நடித்து இருக்கிறார். 

ஒரு கட்டத்தில், படங்களில் வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத்தினால் ஸ்ருதி ராஜ், தொலைக்காட்சியில் நுழைந்தார். தென்றல், அழகு, தாலாட்டு போன்ற படங்கள் ஸ்ருதி ராஜ் நடித்து இருக்கிறார். இப்போது சன் தொலைக்காட்சியில் வரும் லட்சுமி என்ற புது சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

குறிப்பாக தென்றன் சீரியலில் துளசி என்ற பாத்திரம் இவரை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்ந்தது. பல இளம் ரசிகைகள் அவருக்கு உருவாகினார்கள்.

40 வயது கடந்தும் ஸ்ருதி ராஜ் திருமணம் செய்ய தயாராக இல்லை. திருமணம் நடப்பது குறித்து ஸ்ருதி ராஜ் கூறிய வார்த்தைகள் கவனத்தை பெற்று இருக்கிறது. 

முன்பே திட்டமிட்டபடி அது நடக்கவில்லை. திருமணத்தை பற்றி யோசிக்காமல் முன்னேறுவது தான் இப்போது சிறந்தது என்றும் திருமண விவகாரங்கள் அனைத்தையும் குடும்பத்தினர் பார்த்துக் கொள்வார்கள் என்று ஸ்ருதி ராஜ் கூறினார்.

” திருமணம் பற்றி இப்போது வரை நான் யோசிக்கவில்லை. அதை என் பெற்றோர் பார்த்து கொள்வார்கள். நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறேன் ” என்றார்.

முன்னதாக, ஸ்ருதி ராஜ் சினிமா துறையில் இருந்து சீரியல் துறைக்கு வந்த போது ஏற்பட்ட மாற்றம் குறித்து பேசியிருக்கிறார். தொடர் ஒரு நீண்ட பயணம். படம் போல இரண்டு மாதங்களில் முடிவடையவில்லை. சீரியல் அரங்கில் தனக்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். அவர் நடிகையாக வேண்டும் என்று முடிவு எடுத்தவர் அல்ல. தொழிலில் பின்னடைவுகள் அனைவருக்கும் ஏற்படும். ஸ்ருதி ராஜ் தனது வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டது தனது தந்தையின் மரணம் என்று கூறினார்.

நடிப்பில் உள்ள குறைகளை அம்மா சுட்டிக் காட்டுவார். ஆனால் என் தந்தை என்னை எப்போதும் ஊக்குவித்தார். நீங்கள் நன்றாக செய்தீர்கள் என அவர் கூறுவார். ஆறுதலாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது. ஸ்ருதி ராஜ் தனது தாயார் தனது சிறந்த விமர்சகர் என்றும் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்