Vanangaan: ‘அண்ணன் பாலாவிற்கு முழு முதல் நன்றி’ - வணங்கான் படப்பிடிப்பு நிறைவு - நெகிழ்ச்சியில் படக்குழு!
பின்னணி உழைப்பில் பெரும் பங்களிப்பைத் தந்திருக்கும் அற்புதமான குழுவிற்கும் என் நன்றிகள். விரைவில் திரைக்கு வர உழைக்கிறோம். நன்றிகள் - சுரேஷ் காமாட்சி!
பர்சனலாகவும், தொழில் ரீதியாகவும் சறுக்கலை சந்திருக்கும் இயக்குநர் பாலா, வணங்கான் படம் மூலமாக கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்தப்படத்தில் சூர்யா கமிட் ஆகி பின்பு விலகிய நிலையில், தற்போது அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்தப்படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ அண்ணன் பாலாவிற்கு என் முழு முதல் நன்றி. கடின உழைப்பைத் தந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றிகள். கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொண்டு நடித்திருக்கும் நாயகன் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.
நாளைய சினிமாவில் நடிக்கத் தெரிந்த நாயகிகள் வரிசையில் சேர இருக்கும் ரோகிணிக்கும், மற்றொரு நாயகியான ஃபாத்திமாவிற்கும், அன்பிற்கும் உழைப்பிற்கும் உரித்தான என் அன்பின் சமுத்திரக்கனிக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும்,கடினமான நிகழ்வுகளை எப்போதும் எளிதாக்கும் மாஸ்டர் சில்வாவிற்கும் என் நன்றி..
பின்னணி உழைப்பில் பெரும் பங்களிப்பைத் தந்திருக்கும் அற்புதமான குழுவிற்கும் என் நன்றிகள். விரைவில் திரைக்கு வர உழைக்கிறோம். நன்றிகள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, திரைத்துறையில் பாலாவை பற்றி நெகட்டிவான விமர்சனங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு தயாரிப்பாளராக அவரை தேடிச் சென்றது ஏன்? வணங்கான் படத்தின் டீசர் எப்போது வருகிறது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் இந்துஸ்தான் தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி இங்கே!
அவர் பேசும் போது, “பாலா ஒரு வியாபாரி கிடையாது அவர் நினைத்ததை திரையில் கொண்டு வர வேண்டும் என்று போராடும் ஒரு கலைஞன். பிற இயக்குநர்கள் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால், அந்த கதாபாத்திரம் வெறும் போலீசாக வந்து போலீசாகவே சென்றுவிடும்.
ஆனால் பாலா ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால், அதற்கென்று ஒரு தனி உடல் பாணியை வைப்பார். அவரது முடி எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்பார். வசனங்களை எப்படி பேச வேண்டும் என்பதற்கு தனி மொழி நடையை உருவாக்குவார்.
அவருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவர் ஷூட்டிங்கை இழுத்தடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரை நாம் சரியாக இருந்துவிட்டால், அவரும் சரியாக இருப்பார்.
உண்மையாகச் சொல்கிறேன் எனக்கு பாலாவுடன் எந்தவிதமான ஒரு அசௌகரியமும் இதுவரை நடக்க வில்லை. ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் பொழுது, ஒரு நல்ல இயக்குனரை நாம் தேடிச் செல்வது ஒன்றும் தவறில்லை என்று எனக்குத் தோன்றியது.
படம் வரும்பொழுது பாருங்கள். அந்த படத்திற்காக அவர் எப்படி உழைத்திருக்கிறார் என்று. எனக்கு அவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அவரது தொழிலின் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் வேண்டுமென்றே தயாரிப்பாளரின் பணத்தை செலவழிப்பவர் அல்ல.
இங்கு ரிலேஷன்ஷிப் என்பது கண்ணாடி மாதிரி தான் நாம் அழுதால் அதுவும் அழும். நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும். பாலாவும் சிலம்பரசன் போல ஒரு குழந்தை தான்.
நிறைய வீடியோக்களில் அவர் அடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது அவர் மிகவும் சாதுவான ஒரு ஆள். அவர் கமர்சியலாக பணம் சம்பாதித்து இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால். எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம்அவருடைய கம்பேக் படமாக இது இருக்கும் இன்னும் ஒரு வாரத்தில் டீசர் வெளியாக இருக்கிறது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்