Srividya Tragic Life: கையெழுத்து போடாமல் போன பணம்.. முதுகில் குத்திய காதலன்.. முடங்கி போன ஸ்ரீதிவ்யா! - சோககதை!-shobana ramesh latest interview about tragic life of srividya - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Srividya Tragic Life: கையெழுத்து போடாமல் போன பணம்.. முதுகில் குத்திய காதலன்.. முடங்கி போன ஸ்ரீதிவ்யா! - சோககதை!

Srividya Tragic Life: கையெழுத்து போடாமல் போன பணம்.. முதுகில் குத்திய காதலன்.. முடங்கி போன ஸ்ரீதிவ்யா! - சோககதை!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 02, 2024 04:45 AM IST

நானும், ஸ்ரீ திவ்யாவும் திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி செல்வோம். அப்படித்தான் ஜார்ஜ் உடனான பழக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஸ்ரீதிவ்யாவின் பணத்தை நிர்வகிக்கும் அளவுக்கு அவர் நெருக்கமானார்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

அவர் பேசும் போது, “ஸ்ரீதிவ்யாவை கல்யாணத்திற்கு முன்னர் அவ்வளவு அழகாக பார்த்துக் கொண்டார் ஜார்ஜ். அவர் ஒரு பக்கா மலையாளி.  நல்ல கட்டு மஸ்தான உடல் அவருக்கு.

நானும், ஸ்ரீ திவ்யாவும் திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி செல்வோம். அப்படித்தான் ஜார்ஜ் உடனான பழக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஸ்ரீதிவ்யாவின் பணத்தை நிர்வகிக்கும் அளவுக்கு அவர் நெருக்கமானார். 

ஆனால் எனக்கு அவர் அப்போதே ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பது நன்றாகவே தெரியும். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான், திடீரென்று வித்யாவின் அக்கவுண்டில் இருந்து, அவர் செக் கொடுக்காமலேயே பணம் சென்றிருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து பேங்கில் சென்று கேட்ட பொழுது, அவருடைய கையெழுத்திட்ட செக் உள்ளே இருப்பதாக பேங்க் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. இதனை கேட்ட வித்யா அப்படியே அப்செட் ஆகி உட்கார்ந்து விட்டாள். 

இதனையடுத்து ஜார்ஜ் மீது அவர் வழக்கு பதிவு செய்தார்.  அவர் திருவனந்தபுரத்திலிருந்து போயஸ் கார்டனுக்கு வந்து விட்டார்.அப்போதே அவருக்கு சின்ன சின்ன உடல் நலக்குறைவு ஏற்பட்டு கொண்டிருந்தது. அப்போது அவருக்கு கேன்சர் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 

அந்த சமயத்தில் அவர் தன்னுடைய எடையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் போய்க்கொண்டிருந்தது. இதற்கிடையில் வந்த இந்த சில உடல் நலக்குறைவுகள் அவரது கன்னத்தை ஒடுக்க வைத்தது. அவளால் பாதி கண்களை மட்டுமே திறக்க முடிந்தது. பின்னர் அவர் திருவனந்தபுரத்திற்கு சென்று விட்டார். அங்கு சென்ற சில காலத்திற்கு பிறகுதான் அவருக்கு கேன்சர் இருப்பதை என்னிடம் சொன்னார்.” என்று பேசினார். 

ஸ்ரீவித்யாவின் இறப்பு தொடர்பான இறுதி நிமிடங்கள் குறித்து அவரது உறவினர் விஜயலட்சுமி கலாட்டா பிங்க் சேனலில் அண்மையில் பேசினார். அவர் பேசும் போது, “ 2003இல் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவர் மார்பக புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.இது எதையுமே ஸ்ரீ வித்யா எங்களிடம் சொல்ல வில்லை. சில வருடங்களுக்குப் பின்னர் தான் ஸ்ரீவித்யாவிற்கு கேன்சர் என்பது எங்களுக்கு தெரிந்தது.

காலப்போக்கில் அந்த கேன்சர் அவளுடைய முதுகெலும்பிற்கு பரவ ஆரம்பித்துவிட்டது. இதன் நிலையில்தான் திடீரென்று ஸ்ரீவித்யா அவரது இறுதி கால நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பத்திரிக்கை செய்தி வந்தது.

அதன் பின்னர்தான், அவருடைய அண்ணனும் என்னுடைய கணவருமான சங்கரை உடனே ஸ்ரீவித்யா இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தேன். அங்கே சென்று அவர் பார்த்த போது ஸ்ரீவித்யாவிற்கு முடி எல்லாம் கொட்டி, முகமெல்லாம் மஞ்சு நிறமாக மாறி இருந்தார்.இதைப் பார்த்த சங்கர் பயங்கரமாக கத்தி இருக்கிறார்.ஆனால்,அஸ்ரீவித்யாவவோ ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து நீ அங்கே சென்று உன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள் என்று ஸ்ரீவித்யா சொல்ல, சங்கரோ இல்லை நான் செல்ல மாட்டேன் இங்கு தான் இருப்பேன் என்று அடம் பிடித்திருக்கிறார் ஸ்ரீவித்யா என்னை பார்ப்பதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். அன்றைய தினம் மதியம் கமல் ஸ்ரீவித்யாவை பார்த்தார்.

அதன் பின்னர் நாங்கள் அவரை சென்று பார்க்கும் பொழுது அவர் கண்ணெல்லாம் வெளியே வந்து, மூகமெல்லாம் மஞ்சள் படிந்து கையெல்லாம் காய்ந்து போய், சுயநினைவு இழந்து ஸ்ரீவித்யா இருந்தார். சில மணி நேரங்கள் தான் அவள் உயிரோடு இருக்கப் போகிறாள் தெரிந்து விட்டது. எங்கள் கண்முன்னே அவள் உயிர்பிரிந்தது.

அதன் பின்னர் அவளை வண்டியில் ஏற்றி இறுதி ஊர்வலம் நடத்தி, 14 குண்டுகள் முழங்க அவளுக்கு எங்கள் முறைப்படி இறுதிச் சடங்கை செய்தோம். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு வாத்தியார்கள் வரவில்லை. கேட்டால் அவள் பிராமணர் இல்லை என்று சொன்னார்கள்” என்று

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.