'ஸ்ரேயா கோஷல் என் தெய்வம்.. ஜானகி அம்மா வாய்ஸில் மட்டும் எக்ஸ்பிரசன் செய்வாங்க’: பாடகிகள் பற்றி சிவாங்கி பேட்டி!
சினிமாவில் தற்போது சிவாங்கி கிருஷ்ணகுமார் நடிப்பு மற்றும் பாடல் திறமைமூலம் படிப்படியாக இன்றைய இளம் தலைமுறையை ஈர்த்துவருகிறார். அவரது பேட்டியைக் காணலாம்.

'ஸ்ரேயா கோஷல் என் தெய்வம்.. ஜானகி அம்மா வாய்ஸில் மட்டும் எக்ஸ்பிரசன் செய்வாங்க’: பாடகிகள் பற்றி சிவாங்கி பேட்டி!
சிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவியில் 2020ஆம் ஆண்டு நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் பிரபலமான நபராக மாறினார். முன்னதாக, அவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 7 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார். சினிமாவில் தற்போது இவர் நடிப்பு மற்றும் பாடல் திறமைமூலம் படிப்படியாக இன்றைய இளம் தலைமுறையை ஈர்த்துவருகிறார்.
இத்தகைய சிவாங்கி 2025ஆம் ஆண்டு, மார்ச் 11ஆம் தேதி, கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு:
‘’நாம் ரசித்த பாடகிகளின் லிஸ்ட் சொல்றேன். அவங்க பாடல்களில் பிடித்த பாடல் ஒன்று?நீங்கள் சொல்லணும். முதலில் பின்னணிப் பாடகி பி.சுசிலா அம்மா பற்றி சொல்லுங்க?
சுசிலா அம்மா பாடுறது வந்து, ரொம்பக் கஷ்டப்படாமல் மயிலிறகை வைக்கிற மாதிரி ஒரு சிங்கர். நான் சொல்றதுக்கு எனக்கு அருகதை இல்லை. அவங்க பாடுனதில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ ஞாபகம் தொல்லையோ’ பாடல் ரொம்பப் பிடிக்கும்.
