Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவராஜ்குமார் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவராஜ்குமார் பேட்டி

Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவராஜ்குமார் பேட்டி

Marimuthu M HT Tamil
Jan 26, 2025 05:29 PM IST

Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’ என புற்றுநோயில் இருந்து மீண்டு நாடு திரும்பிய சிவண்ணா பேட்டியளித்துள்ளார்.

Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவண்ணா பேட்டி
Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவண்ணா பேட்டி (social media)

சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவராஜ்குமார், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். இவரது கடைசி சகோதரன் தான், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் ஆவார். 

இந்நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார், குடியரசு தினத்தன்று கர்நாடகாவுக்கு திரும்பிய செய்தியைக் கேட்டதும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் பெங்களூரு விமான நிலையத்தின் டோல்கேட் முன்பு திரண்டனர். 

ஏறத்தாழ இன்று காலை 9 மணிக்கு மேல், பெங்களூரு வந்த சிவ ராஜ்குமாரை அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். அவரது ரசிகர்கள் ஆப்பிள் மாலை அணிவித்து வரவேற்றனர். திரையுலக பிரபலங்களும் சிவராஜ்குமாரை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

அதைத் தொடர்ந்து தனது இல்லத்துக்குத் திரும்பினார், சிவராஜ்குமார். 

பயம் இருந்தது - சிவராஜ்குமார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் குமார் கூறியதாவது, "சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். பயமும் இருந்தது. விமானத்தில் பயணிக்கும்போது கூட கொஞ்சம் பயம் இருந்தது. 

வாழ்க்கையில் எது வந்தாலும், அதை எதிர்கொண்டு பயணிப்போம். நான் அமெரிக்கா சென்றபோது, நான் அதிக நம்பிக்கையுடன் இருந்தேன். அறுவை சிகிச்சை செய்த நாளிலேயே பயம் இருந்தது. அறுவை சிகிச்சையின்போது ஆறு மணி நேரம் அனைவருக்கும் பயம் இருந்தது. அதன்பின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது" என்று சிவராஜ்குமார் என்ற சிவண்ணா கூறினார்.

சில நாட்களுக்கு திரவ உணவை எடுத்தேன்: சிவராஜ்குமார்

அதன்பின் பேசிய சிவராஜ்குமார், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களுக்கு, நான் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டேன். அதன்பின்னும் நடைப்பயிற்சி செய்தேன்.

சில நாட்களில் என் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டது. நான் இப்போ ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கேன்.  எனது வீட்டுப்பெண்களுக்கு இது மிகவும் கடினமான தருணமாக இருந்தது. எனக்காக நிறைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். பயணத்திலும் ஆதரவு கொடுத்தனர்.

 இந்த ஒரு மாதம், எல்லோரும் என்னுடன் தங்கி என்னை கவனித்துக் கொண்டனர். நான் அதிர்ஷ்டசாலி. ராஜா திரும்பி வந்துவிட்டார். எனது 131-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதில் கலந்துகொள்வேன். ராம் சரண் படத்திலும் நடிப்பேன்’’ என்றார் சிவராஜ்குமார்.

தன்னை வரவேற்க பெங்களூரு விமான நிலையம் வந்தவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார் சிவண்ணா. ரசிகர்கள் கொண்டு வந்த மாலைகளை காரில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

சிவண்ணா பெங்களூருக்கு திரும்பிய செய்தி, சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலைய சாலைகளிலும், சிவண்ணாவின் வீட்டைச் சுற்றியும் "ராஜா இஸ் பேக்"என்ற கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த கட்அவுட்களில் சிவராஜ்குமாருடன், அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் இருக்கும் புகைப்படமும் காணப்படுகிறது. சிவராஜ்குமார் நல்லபடியாக பெங்களூரு திரும்புவதற்காக அவரது ரசிகர்கள் அவருக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

புற்றுநோயில் இருந்து விடுபட்டதை முன்பே உறுதிசெய்த சிவராஜ்குமார்:

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் சிவராஜ்குமார், புத்தாண்டின் முதல் நாளில் தான் அதில் இருந்து மீண்ட நல்ல செய்தியைக் கூறினார். 

அமெரிக்காவின் மியாமியில் இருந்து ஒரு சிறப்பு வீடியோவைப் பகிர்ந்த சிவண்ணா, "நான் இப்போது புற்றுநோயிலிருந்து விடுபட்டுள்ளேன். அனைத்து அறிக்கைகளும் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்று வந்துள்ளன. என் மனைவி கீதாவின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. 

ஒரு மாதம் ஓய்வெடுப்பென். மார்ச் மாதத்திற்குள், உங்கள் ஆற்றல்மிக்க சிவண்ணாவாக மீண்டும் வருவேன்’’ என்றார்.

 முன்னதாக, சிவராஜ்குமார் என்ற சிவண்ணா சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.