நிச்சயம் திரும்பி வருவேன்! புற்றுநோய் சிகிச்சையில் சிவராஜ்குமார்! கவலையில் கன்னட திரையுலகம்!
தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் திரைப்பட மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் திரைப்பட மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அறுவை சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
மேலும் இவரது இந்த நிலையை எண்ணி கன்னட சினிமா திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்த சிவராஜ்குமாரின் மகன்களான புனித் ராஜ்குமார் மற்றும் சிவராஜ் குமார், கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனை அடுத்து புனித் ராஜ்குமார் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன.
அமெரிக்காவில் சிகிச்சை
இந்த நிலையில் தற்போது நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் வந்த காரணத்தால் அவரது சொத்துக்களை பொது மக்களுக்கு எழுதி வைத்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவராஜ்குமார் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அறுவை சிகிச்சை செய்ததற்காக சென்றுள்ளார்.
தமிழில் ஜெய்லர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களின் மூலம் அறிமுகமான சிவராஜ்குமார் அவரது நேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தார். புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "புற்றுநோய் என்று கூறியதும் எனக்கும் பதற்றமாக தான் இருந்தது. ஆனால் பதற்றம் அடைய வேண்டாம். இதற்கான அனைத்து பரிசோதனையும் எடுத்த பின்பு இதனை குணமாக்க முடியும் என மருத்துவர் கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பிற்கு மிகவும் நன்றி என தெரிவித்திருந்தார். மேலும் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 24ஆம் தேதி தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மருத்துவர் முகேஷ் என் மனோகர் என்பவர் தான் தனக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறார் என்ற தகவலையும் கூறியிருந்தார்.
சோகத்தில் ரசிகர்கள்
ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை அனைத்தையும் முடித்துவிட்டு வீடு திரும்ப முடிவெடுத்துள்ளார் சிவராஜ் குமார். இவருடன் அவரது மனைவி கீதாவும் அவரது மகள் நிவேதிதாவும் சென்றுள்ளனர். மேலும் இவர் நடித்து கன்னட மொழியில் வெளியான பாரத ரணங்கள் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியாகி அதிக வசூலை பெற்றிருக்கிறது. மேலும் உத்தரகண்டா 45 பைரவணா கோனே போன்ற படங்களிலும் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் சரணின் அடுத்த படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் விரைவில் குணமடையை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கன்னட மொழியில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் சுதீப் போன்றோரும் சிவராஜ்குமார் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் ரசிகர்களும் இவருக்காக்க பிரார்த்தனை செய்து வருவதாக சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்