Shinhan hussaini: ‘பவன் போட்டியாக விஜய்.. கையில் ஏறிய டயர்கள்; துடித்து போன சங்கீதா’ - பத்ரி டயர் சீன் உருவானது எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shinhan Hussaini: ‘பவன் போட்டியாக விஜய்.. கையில் ஏறிய டயர்கள்; துடித்து போன சங்கீதா’ - பத்ரி டயர் சீன் உருவானது எப்படி?

Shinhan hussaini: ‘பவன் போட்டியாக விஜய்.. கையில் ஏறிய டயர்கள்; துடித்து போன சங்கீதா’ - பத்ரி டயர் சீன் உருவானது எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 09, 2024 07:00 AM IST

shinhan hussaini: அவரிடம் நான் மிகவும் கறாராக, நான் இப்போது கராத்தே சொல்லிக் கொடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் அவரிடம் நான் எவ்வளவோ கூறியும், ஒரு மாதம் என்னை தினமும் வந்து பார்த்தார். - பத்ரி டயர் சீன் உருவானது எப்படி?

Shinhan hussaini: ‘பவன் போட்டியாக விஜய்.. கையில் ஏறிய டயர்கள்; துடித்து போன சங்கீதா’ - பத்ரி டயர் சீன் உருவானது எப்படி?
Shinhan hussaini: ‘பவன் போட்டியாக விஜய்.. கையில் ஏறிய டயர்கள்; துடித்து போன சங்கீதா’ - பத்ரி டயர் சீன் உருவானது எப்படி?

பவன் கல்யாண் கொடுத்த அர்ப்பணிப்பு 

இது குறித்து அவர் பேசும் போது, “  விஜய் பத்தி கேட்கும் பொழுது, எனக்கு இன்னொருவர்  ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பவன் கல்யாண். பவன் கல்யாணும் என்னுடைய மாணவர்தான். நான் அப்போது கராத்தே சொல்லிக் கொடுப்பதை முழுவதுமாக நிறுத்தி இருந்தேன். அந்த சமயத்தில்தான் பவன் கல்யாண், என்னிடம் வந்து கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். 

அவரிடம் நான் மிகவும் கறாராக, நான் இப்போது கராத்தே சொல்லிக் கொடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் அவரிடம் நான் எவ்வளவோ கூறியும், ஒரு மாதம் என்னை தினமும் வந்து பார்த்தார். ஒரு கட்டத்தில் எனக்கே அவர் மீது இரக்கம் வந்துவிட்டது. இதனையடுத்து நான் அவரை என்னுடைய மாணவராக ஏற்றுக் கொண்டேன். 

ஒரு வருடத்தில் பிளாக் பெல்ட்

கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் என்னோடு பயணித்தார். எனக்கு தினமும் டீ போட்டுக் கொடுப்பார். சமையல் தொடர்பான இடங்களை சுத்தம் செய்வார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகுதான், அவர் சிரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர் என்பது எனக்குத் தெரியும். இறுதியில் அவர் பிளாக் பெல்ட் வாங்கினார். 

அதன் பின்னர் அவர் ஒரு படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் அவர் கைகள் மீது லாரி டயர்கள் ஏறுவது போன்ற காட்சி இருக்கும். அந்த படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார்கள். அதில் ஹீரோவாக விஜயை கமிட் செய்தார்கள். அந்த திரைப்படம்தான் பத்ரி. விஜய் படத்தில் கமிட்டாகும் பொழுதே, கல்யாண் உண்மையில் செய்த அந்த சாகசத்தை, நானும் உண்மையில் செய்ய வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டார். 

பிடிவாதமாக நின்ற விஜய்

இதையடுத்து படக்குழுவினர் என்னை வந்து அணுகினார்கள். நிறைய பணம் தந்தார்கள். இதனையடுத்து நான் விஜய்க்கு பயிற்சி  கொடுத்தேன். அந்த காட்சியை ஹைதராபாத்தில் வைத்து ஷூட் செய்தோம். உண்மையாக பார்த்தால், கை விரல்களின் மீதுதான் வண்டியின் டயர்கள் ஏற வேண்டும். ஆனால், ஒரு சில வண்டிகள், விஜயின் மணிக்கட்டிலும் ஏறிருக்கும். அதனை அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு செய்தார். அதை அவர் மிகவும் பிடிவாதமாக செய்ய வேண்டும் என்று செய்தார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜயின் மனைவியான சங்கீதாவும் இருந்தார்.அவரும் இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், என்னிடமும் சொல்லச் சொன்னார். ஆனால் விஜய் கடைசிவரை பிடிவாதமாக இருந்து, அந்த காட்சியில் நடித்தார்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.