தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shilpa Says She Did Not Marry Raj For Money: Richer People Have Wooed Me

Shilpa Shetty: நான் செக்ஸ் பட மன்னனின் மனைவியா? - ட்ரோல்களுக்கு ஷில்பா பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 10, 2024 08:36 AM IST

ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தபோது, அவர் எவ்வாறு பணக்காரராக இருந்தார் என்பதையும், அவரது உணவகமான பாஸ்டியன் இப்போது தன்னை எவ்வாறு பணக்காரராக்கியது என்பதையும் பற்றி பேசினார்.

Shilpa Shetty claimed that people richer than Raj Kundra were ready to marry her
Shilpa Shetty claimed that people richer than Raj Kundra were ready to marry her

ட்ரெண்டிங் செய்திகள்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு, ஆபாச வீடியோக்களை தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு சம்பாதித்ததாகவும், கொரோனா காலத்தில் பண நெருக்கடியை சந்தித்த நடிகைகளிடம் பண ஆசைக் காட்டி, அவர்களை வீடியோவில் நடிக்க வைத்து, வெளிநாட்டு மொபைல் ஆப்களில் அவர் வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது. 

இந்த புகாரில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் இவர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நெட்டிசன்கள், ஷில்பா ஷெட்டியையும்  ‘ஆபாச மன்னனின் மனைவி’ என ட்ரோல் செய்தனர். 

மேலும் பணத்திற்காகவே ஷில்பா ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டதாகவும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இதற்கு ஷில்பா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிலளித்து இருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ நான் அப்போதே பணக்காரியாகதான் இருந்தேன். இப்போதும் பணக்காரியாக இருக்கிறேன். நீங்கள் வெற்றிக்கரமான பெண்ணாக இருக்கும் பட்சத்தில், உங்களை மணக்க விரும்பும் ஆண்மகன் உங்களை பாதுகாப்பற்றவளாக உணரவைக்காதவராக இருக்க வேண்டும். ராஜ் நல்ல மனிதராக இல்லாமல் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டேன். அன்று இவரை விட பெரிய பணக்காரர்கள் என்னை கவர்ந்தனர். " என்று அவர் கூறினார்.

தன்னுடைய புதிய ஹோட்டலைப்பற்றியும் தன்னுடைய நிதி நிலைமை குறித்தும் பேசிய ஷில்பா., “ வெளியில் இருந்து என்னுடைய நிதி நிலைமை குறித்து பேசுபவர்கள் அனைவரும் தவறானவர்கள், அவர்களின் எண்ணிக்கை முற்றிலும் தவறானது. கடந்த முறை எங்களுடைய ஹோட்டலுக்காக அதிகபட்ச ஜிஎஸ்டி பணத்தை நாங்கள் செலுத்தினோம். என்னுடைய மேலாளர்கள் எனக்கு சினிமாவில் வரும் வாய்ப்புகளை விட, ஹோட்டலில் அதிக சீட்கள் புக் ஆவதாக கூறுகின்றனர்” என்றார்.

ஷில்பா மற்றும் ராஜ் பற்றி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் இணை உரிமையாளராக இருந்த ராஜ்  மற்றும் நடிகை ஷில்பா பிப்ரவரி 2009 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அதே ஆண்டு நவம்பரில்  திருமணம் செய்து கொண்டது. 

இவர்கள், 2012ம் ஆண்டு தன்னுடைய முதல் குழந்தையான  வியான் ராஜ் குந்த்ராவை வரவேற்றனர். கடந்த 2020-ல், அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் சமிஷா ஷெட்டி குந்த்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்