Shankar on Arrahman: ‘கேட்டு அப்படியே மிரண்டுட்டேன்..’ - சிக்கு புக்கு ரயிலே உருவான விதம் - ஷங்கர்
Shankar on Arrahman:நீங்கள் அந்தப் படத்தில் பார்த்தீர்கள் என்றால். ஐஸ் சவுண்டெல்லாம் அப்படியே கேட்கும். பேஸ் எல்லாம் ஜாரிங்கில்லாமல் இருக்கும். - ஷங்கர்

Shankar on Arrahman: இயக்குனர் சங்கர் ஏ ஆர் ரகுமான் உடன் முதல் படத்தில் சிக்கு புக்கு ரயில் பாடலுக்கான டியூனை வாங்கிய அனுபவம் குறித்து ஓபன் பண்ணா சேனலில் பேசி இருக்கிறார்.
அப்படி ஒரு சவுண்ட் குவாலிட்டி
இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் வசதி எல்லாம் அப்போது கிடையாது. எல்லாமே ஃபிலிம்மில் தான் ரெக்கார்ட் ஆகும். அதில் ஸ்டீரியோ வடிவிலான இசையை கொண்டு வருவதே அவ்வளவு கடினமான ஒன்று. ஆனால் ரஹ்மான் அதிலேயே அப்படியான ஒரு சவுண்ட் குவாலிட்டியை அந்த படத்தில் கொண்டு வந்திருந்தார். நீங்கள் அந்தப் படத்தில் பார்த்தீர்கள் என்றால். ஐஸ் சவுண்டெல்லாம் அப்படியே கேட்கும். பேஸ் எல்லாம் ஜாரிங்கில்லாமல் இருக்கும். வெள்ளை மழை பாட்டில், அப்படி ஒரு சவுண்ட் இருக்கும். அந்த சவுண்டுக்கு உண்மையில் கண்ணாடி எல்லாம் நொறுங்கிவிடும். ஆனால், அது அனைத்தும் ஜாரிங்கில்லாமல் அவ்வளவு தெளிவாக கேட்டது. சவுண்டே மிகவும் புதுமையாக இருந்தது.
உதயம் தியேட்டரில் அந்த படத்தை பார்த்துவிட்டு, இடைவேளையில் வெளியே வந்த போது, அந்த இசை அப்படியே என் மனதிற்குள் நின்றது. அப்போதுதான் நாம் பணியாற்றினால், இவருடன் தான் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏ ஆர் ரஹ்மான் டெக்னிக்கலாக மிக மிக ஸ்ட்ராங். எந்தெந்த தியேட்டரில், எப்படி சவுண்ட் கேட்கும் என்பதை மிகச் சரியாகக் கணித்து, சினிமாவை புரிந்து கொண்டவர். இசையை ஆப்டிக்கலாக கன்வர்ட் செய்யும் பொழுது, அதனுடைய மேஜிக் போகாமல் எப்படி அதை கொண்டு வர வேண்டும் என்பதெல்லாம் ஏ ஆர் ரஹ்மானுக்கு மிக மிக நன்றாக தெரியும்.