தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shankar Indian 2 Fetches Highest Price For Kamal Haasan Film In Ap Ts

Indian 2: இரட்டை இலக்கத்தில் பண பட்டுவாடா.. இருப்பை தக்க வைக்கும் ஷங்கர்.. மார்க்கெட் ரேசில் கமல்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 06:19 PM IST

ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே நடந்த மோதல் ஆகியவை இந்தப்படத்தை தாமதப்படுத்தியது.

கமல்ஹாசன்!
கமல்ஹாசன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தின் முதல் பாகம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. 

முன்னதாக வெளியான விக்ரம் திரைப்படம் எல்லா இடங்களிலும் குறைந்த பட்சம் 8 முதல் 10 கோடி வரை விற்பனை ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியன் 2 திரைப்படம் தெலுங்கின் இரண்டு மாவட்டங்களில் மட்டும் 22 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இது குறித்து விநியோகஸ்தர் ஒருவர் தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேசும் போது, “ இது கமல்ஹாசனுக்கு இரண்டு மடங்கு தொகை மட்டுமல்ல.. அண்மைகாலங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்களின் விநியோகத்தொகையை விட அதிக பட்ச தொகையாகும். 

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியே இந்த விலையை நிர்ணயித்து இருக்கிறது. காரணம் இதன் முந்தைய பாகம் சூப்பர் ஹிட் ஆனதே!” என்று பேசினார். 

முன்னதாக, கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் . இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் - கமல் கூட்டணி எடுக்க முடிவு செய்த நிலையில், இந்தப்படத்தின் தயாரிப்பாளராக லைகா சுபாஷ்கரன் கமிட் ஆனார்.

ஆனால் படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே நடந்த மோதல் ஆகியவை இந்தப்படத்தை தாமதப்படுத்தியது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சினையில் தலையிட, இருதரப்பும் சமாதானம் ஆகி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்

IPL_Entry_Point

டாபிக்ஸ்