தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shankar Das Who Published The Story Of Ayodhya; What Is S. Ramakrishnan Going To Say!!

அயோத்தி கதையை வெளியிட்ட சங்கர் தாஸ்; என்ன சொல்ல போகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2023 04:18 PM IST

Ayothi:உண்மைகளை போட்டு உடைத்திருகிறார் சங்கர் தாஸ் Sankar Dass . அவருக்கு மிக்க நன்றி.

எழுத்தாளர் மாதவராஜ் - எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் மாதவராஜ் - எஸ்.ராமகிருஷ்ணன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் அயோத்தி படத்திற்கு திரைக்கதை எழுதிய சங்கர் தாஸ் தன்னிடம் தரப்பட்ட எஸ்.ராவின் கதையை இன்று தன் முகநூல் பக்கத்தில் சங்கர்தாஸ் வெளியிட்டு இருக்கிறார். அவரது பதிவில் 

உண்மைகளை போட்டு உடைத்திருகிறார் சங்கர் தாஸ் Sankar Dass . அவருக்கு மிக்க நன்றி.

அயோத்தி படத்திற்கு முதலில் திரைக்கதை எழுதியவர் சங்கர் தாஸ். பிறகு வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ”இது எஸ்.ராமகிருஷ்ணனின் கதை” என இரண்டு பக்கக் கதையை இயக்குனர் மந்திரமூர்த்தி, இவரிடம் கொடுத்து திரைக்கதை எழுதச் சொல்லி இருக்கிறார்.

அப்படி தன்னிடம் தரப்பட்ட எஸ்.ராவின் கதையை இன்று தன் முகநூல் பக்கத்தில் சங்கர்தாஸ் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளர் செய்கிற காரியமா இது? 2011ல் நான் எழுதியதை 2022ல் அப்படியே ஈயடிச்சான் மாதிரியா காப்பியடித்து இருப்பார்.?

இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் மக்களே!

சட்டென்று பிடிபட்ட ஒரே மாதிரியான எழுத்துக்களை இங்கு பகிர்கிறேன்.

கதை ஒப்பீடு இதோ!

லக்னோவிற்கு விமானம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர்.நேரடி விமானம் இல்லை என்கிறார்கள்.பொராமவுண்ட் , கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது .இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர். (எஸ்.ரா எழுதியது)

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். (மாதவராஜ் எழுதியது)

அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்..”மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும் இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது “என்று சொல்லி மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட் பனிரெண்டரைக்குள் வாருங்கள் என அவசரப்படுத்துகிறார்கள்..அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (எஸ்.ரா எழுதியது)

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (மாதவராஜ் எழுதியது)

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது.அங்கு சென்று விசாரிக்கிறார்கள்.ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று கை விரித்துவிட்டார்கள்.மதுரைக்குள் செல்லவேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.கதிர் தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான். (எஸ்.ரா எழுதியது )

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது)

தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் (எஸ்.ரா எழுதியது )

மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். (மாதவராஜ் எழுதியது )

தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய்11000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார் (எஸ்.ரா எழுதியது )

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )

நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார்.எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும்.நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார்?

(எஸ் ரா எழுதியது )

“நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” (மாதவராஜ் எழுதியது )

இதற்கு மேலும் நடந்த உண்மைச் சம்பவத்தை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என யாரும் உருட்ட வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளர் மாதவராஜிடம் நாம் கேட்டபோது நான் எழுதிய கதை திருடப்பட்டுள்ளது என்பதை சங்கரதாஸ் போட்டு உடைத்துள்ளார். ஆனாலும் இதுவரை படக்குழு தரப்பிலோ எஸ்.ராம கிருஷ்ணன் தரப்பிலோ இதுகுறித்து பேச யாரும் முன்வரவில்லை. நான் விரும்பியது ஒன்றுதான். உண்மைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அந்த இரண்டு தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார் Samuel Jothi Kumar, சுரேஷ் பாபு Suresh Babu ஆகியோரையும், அதற்கு பின்னணியாய் இருந்த பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தையும் இந்த தருணத்தில் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும் என்பதுதான். மேலும் எஸ்.ரா இது தன் கதை இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சங்கர்தாஸ் பதிவிற்கு எஸ்.ராம கிருஷ்ணன் என்ன பதில் சொல்ல போகிறார் சினிமா வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.