சக்தி சக்தி சக்திமான்.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.. சக்திமான் இஸ் பேக்.. மனம் திறந்த முகேஷ் கன்னா!
சக்திமான் மீண்டும் வருகிறது. இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கன்னா சமீபத்தில் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், அவர் மீண்டும் இந்த பாத்திரத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்தார்.
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ என்று ரசிகர்கள் வர்ணிக்கும் சக்திமான் மீண்டும் வரப்போகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த சீரியல் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது அதே கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் முகேஷ் கண்ணா நடிக்கிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, அவர் சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.
இது என்னுள் இருக்கும் கதாபாத்திரம்
இந்தியாவின் சூப்பர் ஹீரோ சக்திமான் 1997 முதல் 2005 வரை ஒளிபரப்பப்பட்டது. இது மொத்தம் 450 அத்தியாயங்கள் நீடித்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த சக்திமான் மீண்டும் கம்பேக் கொடுக்கும் செய்தி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதற்கு முகேஷ் கண்ணா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார். "இதுதான் என்னுள் இருக்கும் காஸ்ட்யூம். தனிப்பட்ட முறையில் எனக்கு, இந்த உடை எனக்குள் இருந்து வந்தது.
அதனால்தான் இந்த கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாக செய்ய முடிந்தது. நடிப்பு என்பது முழுக்க முழுக்க தன்னம்பிக்கை. நான் படப்பிடிப்பின் போது கேமராவை மறந்துவிடுகிறேன். நான் மீண்டும் சக்திமானாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று முகேஷ் கண்ணா கூறினார்.
அதனால்தான் மீண்டும் சக்திமான்
முகேஷ் கண்ணா சமீபத்திய நேர்காணலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சக்திமானாக மீண்டும் வருவது குறித்து மனம் திறந்தார். 1997 முதல் 2005 வரை நான் செய்த கடமையைத் திரும்பச் செய்கிறேன். 2027 ஆம் ஆண்டிலும் எனது செயல்திறன் அனைவரையும் சென்றடைய வேண்டும். ஏனென்றால் இந்தத் தலைமுறை தொடர்ந்து கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கொஞ்சம் மூச்சு வாங்கணும்" என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10), முகேஷ் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2005 இல் முடிவடைந்த சக்தி மான் நிகழ்ச்சி மீண்டும் வரத் தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்தினார், மேலும் அவர் சக்திமானின் உடையில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
சக்திமான் திரும்ப வரும் நேரம் இது
சக்திமான் கேரக்டரில் நடித்த பாலிவுட் நடிகரான முகேஷ் கன்னா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "சக்திமான் திரும்ப வரும் நேரம் இது. நமது முதல் இந்திய சூப்பர் டீச்சர்- சூப்பர் ஹீரோ. ஆம் ! இன்றைய குழந்தைகள் மீது இருளும் தீமையும் மேலோங்கி வருவதால், அவர் திரும்பும் நேரம் இது அமைகிறது. அவர் ஒரு செய்தியுடன், போதனையுடன் திரும்புகிறார். இன்றைய தலைமுறையினருக்காக இரு கைகளால் அவரை வரவேற்கிறோம். டீசரை இப்போது பாருங்கள்" என்று குறிப்பிட்டு டீஸர் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
விடியோவில் ஒரு பள்ளிக்குள் தனது ஸ்டைலில் சுழன்றவாறே வரும் சக்திமான், சுதந்திர போராட்ட தியாகிகளான சந்திரசேகர் அசாத், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பார்த்து பாடல் பாடுகிறார். சக்திமான் கம்பேக் குறித்து இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இது ட்ரெண்டானது. "எனது குழந்தை பருவ ஹீரோ", "சக்திமானை மீண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்", "இந்த தொடர் எனது எனது சிறுவயது இனிமையான நினைவலைகளை கொண்டிருக்கிறது", "மிகவும் பவர்ஃபுல்லான சூப்பர் ஹீரோ" என பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
மீண்டும் சக்திமான்
சக்திமான் இந்தியாவில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் தூர்தர்ஷனில் 1997 இல் ஒளிபரப்பப்பட்டது. இது 450 அத்தியாயங்களுடன் எட்டு ஆண்டுகள் நீடித்தது. இப்போது அது மீண்டும் வருவதால், அந்த காலகட்டத்தின் குழந்தைகள் 1990 களுக்கு செல்ல தயாராக உள்ளனர்.
டாபிக்ஸ்