தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shajahan Vijay Friend Divakara Krishna Emotional Interview About Thalapathy Vijay

Krishna interview: ‘5 நிமிஷம்தான் கேட்டேன்.. அவரு மதிக்கவே இல்ல’ - புலம்பும் ஷாஜகான் கிருஷ்ணா!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 10, 2024 06:30 AM IST

இதனையடுத்து என்னுடைய மேனஜரிடம் அவருடைய மேனஜரின் நம்பரை வாங்கி அவரை தொடர்பு கொண்டு, நான் விஜய் சாரிடம் ஒரு 5 நிமிடம் பேச வேண்டும் என்று கேட்டேன்.

கிருஷ்ணா நேர்காணல்!
கிருஷ்ணா நேர்காணல்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “நான்கு வருடங்களுக்கு முன்னதாக சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் வந்திருந்தேன். அப்போது நடிகர் விஜய் அருகில் ஒரு 2 கி. மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். 

உடனே, நான் அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அங்கு செல்வதற்கு முன்னர் முதலில் அவரது நம்பருக்கு போன் செய்து பேசி விட்டு செல்லலாம் என்று நினைத்தேன். அவர் நம்பர் என்னிடம் இருந்தது ஆனால், அது என்னமோ தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  

இதனையடுத்து என்னுடைய மேனஜரிடம் அவருடைய மேனஜரின் நம்பரை வாங்கி அவரை தொடர்பு கொண்டு, நான் விஜய் சாரிடம் ஒரு 5 நிமிடம் பேச வேண்டும் என்று கேட்டேன்.

அதற்கு  அவர் நீங்கள் நினைப்பது போல விஜய் அப்போது இருந்த ஷாஜகான் விஜய் கிடையாது. இப்போது அவருடைய இடமே வேறு லெவலில் இருக்கிறது. அதனால் அவரை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டார். 

அது எனக்கு மிக மிக வருத்தமாக இருந்தது. காரணம் என்னவென்றால் நான் ஏதோ வெளியில் இருந்து வந்தவன் அல்ல, விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடைய சக நடிகன். அப்படி இருக்கும் பொழுது அவர் பார்க்க முடியாது என்று சொன்னது, என் மனதை மிகவும் வருத்தம் அடைய செய்தது. உடனே நான் பரவாயில்லை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.