தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shaitaan Trailer A Sinister R Madhavan Wrecks Havoc On Ajay Devgns Family

Shaitaan Trailer: இந்தியில் சைத்தான் படம் மூலம் மாஸ் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜோதிகா; கூடவே மாதவனும் மிரட்டல்!

Marimuthu M HT Tamil
Feb 22, 2024 03:30 PM IST

அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா ஒரு மர்மமான அந்நியரை தங்கள் வீட்டிற்குள் அனுமதித்தபோது, நடக்கும் காட்சிகளை சொல்கிறது, சைத்தான் படத்தின் டிரெய்லர்.

மார்ச் 8ஆம் தேதி சைத்தான் ரிலீஸ்
மார்ச் 8ஆம் தேதி சைத்தான் ரிலீஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியில் விகாஸ் பஹல் இயக்கத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருக்கும் படம், சைத்தான். அஜய் தேவ்கனின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, சைத்தான் படத்தின் ட்ரெய்லரில், பல்வேறு ஆச்சரியமான திருப்பங்கள், மர்மங்கள் என விறுவிறுப்பாக இருக்கிறது. மேலும் இப்படத்தில்  ஜோதிகா மற்றும் மாதவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அந்த ட்ரெய்லரில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா ஆகியோர் தங்கள் மகளுடன் வசிக்கும் அமைதியான வீட்டிற்குள் ஆர்.மாதவனின் கதாபாத்திரம் அடியெடுத்து வைக்கும்போது, ‘சைத்தான்’ டிரெய்லர் தொடங்குகிறது. 15 நிமிடங்கள் கழித்து கிளம்புவதாக சொன்னாலும், சிறிது நேரம் கழித்து வீட்டைவிட்டு கிளம்ப மறுக்கிறார். அஜய் தேவ்கனின் கதாபாத்திரம் அவரை வீட்டை விட்டு வெளியேற்றும்போது, அவரது மகள் எழுந்து சென்று தன் தந்தையின் முன் போய், அவர் இங்கேயே இருப்பார் என்று கூறுகிறார். ஆர்.மாதவனின் கதாபாத்திரம் குழந்தையை ’ஹிப்னாடிசம் என்னும் நோக்கு வர்மம்’ செய்துள்ளது என்பது பின்னர் தெரியவருகிறது. அக்குழந்தை தன்னைத்தானே அறைந்துகொள்கிறாள். அவளுடைய தந்தையை அடிக்கிறாள். கடைசியில் அவர்களால் தங்கள் மகளை காப்பாற்ற முடியுமா?என்பதே படத்தின் கதையாக இருப்பதாகத் தெரிகிறது. 

ரசிகர்களின் ரியாக்ஷன்கள்:-

டிரெய்லருக்கு பதிலளித்த ரசிகர்கள் பலரும் உற்சாகமான கருத்துகளைப் பதிவிட்டனர். அதில் ரசிகர் ஒருவர், "ஆர்.மாதவன் மற்றும் அஜய் சார்.. என்ன ஒரு கொடூர காம்போ!"எனப் பதிவிட்டுள்ளார்.

 மற்றொருவர், "டிரெய்லரைப் பார்த்த பிறகு புல்லரிக்கிறது. படத்தின் வெற்றிக்கு பெரிய பட்ஜெட் தேவை அல்ல. நல்ல கதை இருந்தால் போதும் என்பதை இந்த ட்ரெய்லர் உணர்த்துகிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் 5 திறமையான நடிகர்களை வைத்து ஒரு வீட்டுக்குள்ளேயே நடத்தப்பட்டாலும், இந்தப் படம் வேற லெவலாக இருக்கும்போல. இதில் நடித்த அனைவருக்கும் ஹேட்ஸ் ஆஃப்" என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் இன்னொருவர், "சைத்தான் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!" என்று கமெண்ட் செய்துள்ளார்.

சைத்தான் படம் 'வாஷ்' என்ற பாராட்டப்பட்ட குஜராத்தி படத்தின் இந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது. ஜியோ ஸ்டுடியோஸ், அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளராக தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோரின் பெயர் போடப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மார்ச் 8-ம் தேதி இப்படம் இந்தி மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்