தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shaitaan Movie Box Office Collection On Day 1

Shaitaan box office on Day 1: திகிலை கிளப்பும் சைத்தான்.. முதல் நாளே கோடிகளை அள்ளி வசூல் சாதனை! இந்தியிலும் ஜோதிகா மாஸ்

Aarthi Balaji HT Tamil
Mar 09, 2024 12:00 PM IST

Shaitaan box office Report: அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் மற்றும் ஜானகி போடிவாலா ஆகியோர் நடித்த சைத்தான் படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டிருந்தது.

சைத்தான்
சைத்தான்

ட்ரெண்டிங் செய்திகள்

சைத்தான் பாக்ஸ் ஆபிஸ்

அறிக்கையி ன்படி, சைத்தான் அனைத்து மொழிகளுக்கும் முதல் நாளில் இந்தியாவில் நிகரமாக 14.2 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது. இது இந்தியாவில் 16. 90 கோடி ரூபாய் வசூலித்தது.  கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்தில் 25.7 சதவீத இந்தி பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்கள்.

இணையத்தில் படத்தை பாராட்டி ட்வீட் செய்தனர். ஒருவர் எழுதினார், " ரூபாய் = சிறந்தவன். திகில் பிரியர்களுக்கு விருந்து. #Shaitaan உங்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கும் த்ரில்லர். படத்தில் ஒரு மந்தமான தருணம் கூட இல்லை. @ActorMadhavan மற்றும் @ajaydevgn #ShaitaanReview என்ன ஒரு நடிப்பு.

இணைய விமர்சனங்கள் ஷைத்தான்

"வில்லனாக #Madhavan சிறந்த நடிப்பு. அஜய் தேவ்கன், ஜோதிகா மற்றும் குழந்தைகளும் சிறப்பாக நடித்தனர். நல்ல காட்சிகள் மற்றும் பி.ஜி.எம். மொத்தத்தில் ஒரு நல்ல சீட் எட்ஜ் த்ரில்லர்" என்று ட்வீட் செய்துள்ளார். " வாவ்! கூஸ்பம்ப்ஸ். மூவரின் நடிப்பு! வில் எடுங்கள்" என்று மற்றொரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

அஜய் தேவ்கன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவர் தனது பாத்திரத்தை கிட்டத்தட்ட கச்சிதமாக செய்கிறார். நடிகர் மாதவன் வழக்கம் போல அருமை. ஒளிப்பதிவு, இயக்கம், விஎஃப்எக்ஸ், பிஜிஎம், எல்லாமே வாவ் ரகம்.

சைத்தான் பற்றி

இப்படத்தில் ஜானகி போடிவாலாவும் நடிக்கிறார். சைத்தான் படம் 'வாஷ்' என்ற பாராட்டப்பட்ட குஜராத்தி படத்தின் இந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது. ஜியோ ஸ்டுடியோஸ், அஜய் தேவ்கன் எஃப் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் வழங்கும் இப்படத்தை அஜய், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

சைத்தான் கதை

வழக்கம் போல் எல்லா கதையில் இருப்பது போன்று தான் இதிலும், அப்பா, அம்மா, அக்கா, தம்பி என சந்தோஷமாக வாழும் குடும்பம் இருக்கிறார்கள். இவர்கள் ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தங்கள் பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். 

அங்கு மாதவன் ஒரு வழிப்போக்கனாக வருகிறார். தாபா ஒன்றில் அந்த குடும்பத்தை சந்தித்து பழகுகிறார். அவர் கொடுக்கும் உணவை சாப்பிட்ட பின், அஜய் தேவ்கனின் மகள் ஜான்விக்கு ஏதோ மாற்றம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்