தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shahrukh Kahn Dunki Collects Rs. 400 Crore Worlwide And Rs. 200 Crore In India Alone

Dunki Box Office: இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடி! உலகளவில் ரூ. 400 கோடி - ஒரே ஆண்டில் ஷாருக்கான் ஹாட்ரிக் வசூல் வேட்டை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 04, 2024 05:55 PM IST

இந்தியாவில் ரூ. 200 கோடி மற்றும் உலகளவில் ரூ. 400 கோடி கிளப்பில் ஷாருக்கானின் டங்கி நுழைந்துள்ளது. இந்த மைல்கல்லை கடக்கும் ஷாருக்கின் இந்த வருடத்தின் மூன்றாவது படமாகவும் உள்ளது.

வசூல் வேட்டை நிகழ்த்தும் ஷாருக்கானின் டங்கி திரைப்படம்
வசூல் வேட்டை நிகழ்த்தும் ஷாருக்கானின் டங்கி திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜ்குமார் ஹிரானியின் அன்பை பொழியும் அற்புதமான படைப்பான டங்கி ரசிகர்களின் இதயங்களை மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இப்படம் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நெருக்கமான படைப்பாக அமைந்துள்ளது.

பார்வையாளர்களிடமிருந்து வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுடன் டங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதை, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள டங்கி, குடும்பங்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு அழைத்து வருகிறது. இந்த குடும்ப பொழுதுபோக்கு படம் வசூலில் இந்தியாவில் மட்டும் 200 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் உலகம் முழுவதுமாக 400 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது அனைவரும் விரும்பும் ஆக்‌ஷன் இல்லாத படமாக இருந்தாலும், காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பிய ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவுக்கு சான்றாக அமைந்துள்ள இப்படம், வசூலிலும் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.

 

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு 'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.