அமீர் கான் வீட்டிற்கு வந்த ஷாருக்கான், சல்மான்.. நள்ளிரவில் ஒன்று கூடிய ஐகானிக் ஹீரோக்கள்.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அமீர் கான் வீட்டிற்கு வந்த ஷாருக்கான், சல்மான்.. நள்ளிரவில் ஒன்று கூடிய ஐகானிக் ஹீரோக்கள்.. நடந்தது என்ன?

அமீர் கான் வீட்டிற்கு வந்த ஷாருக்கான், சல்மான்.. நள்ளிரவில் ஒன்று கூடிய ஐகானிக் ஹீரோக்கள்.. நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Mar 13, 2025 03:37 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் நேற்றிரவு மும்பையில் சந்தித்துக்கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமீர் கான் வீட்டிற்கு வந்த ஷாருக்கான், சல்மான்.. நள்ளிரவில் ஒன்று கூடிய ஐகானிக் ஹீரோக்கள்.. நடந்தது என்ன?
அமீர் கான் வீட்டிற்கு வந்த ஷாருக்கான், சல்மான்.. நள்ளிரவில் ஒன்று கூடிய ஐகானிக் ஹீரோக்கள்.. நடந்தது என்ன?

பாலிவுட்டின் கான் நடிகர்கள் என்று அழைக்கப்படும் ஷாருக், சல்மான் கான் ஆகியோர் அமீர் கான் வீட்டிற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அமீர் கான் சல்மான் கானை அவரது வீட்டில் இருந்து வழியனுப்பி வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒன்று கூடிய கான் நடிகர்கள்

வைரல் வீடியோவில், சல்மான் அமீர் கானின் வீட்டை விட்டு வெளியே வருவது தெரிகிறது. இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டனர். பின்னர் சல்மான் முன் வாசல் பகுதியில் இருந்து வெளியே வருவது தெரிகிறது. மற்றொரு வீடியோவில், அமிர் பல பாதுகாப்புப் பணியாளர்களுடன் கீழே இறங்கி வருவது தெரிகிறது. ஷாருக் கருப்பு ஹூடியில் முகத்தை மறைத்துக் கொண்டு யாரும் புகைப்படம் எடுக்கப்படாமல் வளாகத்தை விட்டு வெளியேறுகிறார்.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர்கானின் 60ஆவது பிறந்தநாள் விழாவில் மூன்று கான் நடிகர்களும் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாளுக்கு முன்பே இப்படி ஒரு கொண்டாட்டமா? என ரசிகர்கள் திகைத்து போனார்கள். சல்மான் கான் அமீர்கான் வீட்டிற்கு வந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

IIFA விருதுகளில் கலந்து கொண்ட பிறகு ஷாருக் சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் இருந்து திரும்பினார். IIFA-வின் 25 ஆண்டுகளை கொண்டாடும் அவரது சக்திவாய்ந்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மாதூரி தீட்சித் உடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நடனமாடியதும், நடிகரின் தீவிர ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மூன்று கான்கள் ஒன்றாக

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் மூன்று கான்களும் கடைசியாகக் காணப்பட்டனர். ராம் சரண் மற்றும் என்.டி.ஆர் நடித்த ‘RRR’ படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலின் ஹுக் ஸ்டெப்பிற்கு அவர்கள் ஆட்டம் போட்டு கலக்கினர். 'தில் சே' படத்தின் 'சையா சையா', 'முஜ்ஷே ஷாதி கரோகி' படத்தின் 'ஜீனே கே ஹைன் சார் தின்' படத்தின் டவல் ஸ்டெப் மற்றும் 'ரங் தே பசந்தி' படத்தின் 'மஸ்தி கி பத்ஷாலா' ஆகியவற்றையும் அவர்கள் ஆடினர்.

ஷாருக் அடுத்ததாக 'கிங்' படத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம் அமீர் கான் 'சிதாரே ஜமீன் பார்' என்ற தலைப்பில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சல்மானின் அடுத்த படம் 'சிக்கந்தர்' இந்த ஆண்டு ரமலான் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் வெளியான சுல்தான், சர்கார் படங்களின் ரீமேக் என கூறப்படுகிறது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.