Tamil News  /  Entertainment  /  Shah Rukh Khan Pathan Movie Leaked In Online
ஷாருக் கானின் பதான்
ஷாருக் கானின் பதான்

Pathan Leaked: அதுக்குள்ளயா… லீக்கானது ஷாருக் கானின் பதான்

25 January 2023, 10:05 ISTAarthi V
25 January 2023, 10:05 IST

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் படம் ஆன்லைனில் கசிந்தது.

பாலிவுட் கிங் காங் ஷாருக் கானின் பதான் படத்திற்காக ரசிகர்கள் நான்கு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இதில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ், ஃபிலிம்மீ 4 வாப், ஃபிலிம்ஜில்லா, எம்பி4 மூவிஸ், பகல்வேர்ல்ட், வேகமூவிஸ் என பல இணையதளங்களில் லீக் செய்யப்பட்டது. 

பதான் திரைப்படத்தின் எச்டி பிரிண்ட் ஆன்லைனில் கிடைக்கிறது என பலரும் கூறி வருகின்றனர். இந்த செய்தியால் திரைப்பட தயாரிப்பாளர் கவலையடைந்து உள்ளனர். பதான் திரைப்படம் ஆன்லைனில் கசிந்து இருப்பதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் மனதில் வைத்து படம் ஆன்லைனில் கசிவதைத் தடுக்க தயாரிப்பாளர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ், ஃபிலிம்மீ 4 வாப், ஃபிலிம்ஜில்லா, எம்பி4 மூவிஸ், பகல்வேர்ல்ட், வேகமூவிஸ் உள்ளிட்ட இணையதளங்களில் யாரும் படத்தை பார்க்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தளங்களுக்குச் சென்று, படத்தைப் பார்த்து, பதிவிறக்கம் செய்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட நாங்கள் விட மாட்டோம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம், பதான் படத்தின் டிக்கெட்டுகள் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. புக் மை ஷோ இணையதளங்களில் வழங்கிய தகவலின்படி, 10 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு முறையில் வாங்கப்பட்டுள்ளன.

ஐநாக்ஸ் சினிமாஸ் திங்கள்கிழமை 2.75 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்தது. ஐநாக்ஸ் தனது ட்விட்டர் மூலம் இதனைத் தெரிவித்து உள்ளது. 

அதில், " நாட்டில் உள்ள அனைத்து ஐநாக்ஸ் திரையரங்குகளிலும் முதல் வார இறுதி வரை 2.75 லட்சம் பதான் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஆர்வத்தைத் தவறவிடாதீர்கள், 2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் எண்டர்டெயினருக்கு இப்போதே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்" என ட்வீட் செய்தது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் பதான் படம் வெளியான நிலையில் அதனை முன்னதாகவே ஆன்லைனில் கசியவிட்ட சம்பவம் ரசிர்களிடையே சோ

டாபிக்ஸ்