ஆராத்யாவும் ஆப்ராமும் ஒரே மேடையில்! நெகிழ்ச்சி அடையும் ஐஸ்வர்யா ராய் ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!
ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோரின் மகளான ஆராத்யாவுடன் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் உடன் சேர்ந்து ஒரே மேடையில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருபாய் அம்பானி பள்ளியில் நேற்று ( 19/12/2024 -வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கௌரி கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பிரபலங்கள் ரசிக்கும் பல வீடியோக்கள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆராத்யா, ஆப்ராமின் நடிப்பை பதிவு செய்த ஐஸ்வர்யா, ஷாருக்
ஒரு கிளிப்பில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக்கின் மகள் ஆராத்யா பச்சன் மேடையில் நடனமாடுவதைக் காண முடிந்தது. புன்னகையுடன் ஐஸ்வர்யா ராய் ஆராத்யா பச்சனின் நடிப்பை தனது செல்போனில் பதிவு செய்தார். மற்றொரு வீடியோவில், ஷாருக் கான் மற்றும் கௌரி கானின் இளைய மகன் ஆப்ராம் கானும் ஆராத்யாவுடன் நடனமாடுவதைக் காண முடிந்தது. ஷாருக்கும் தனது மகனின் செயலை தனது தொலைபேசியில் பதிவு செய்தார்.
ஐஸ்வர்யா - அபிஷேக்
நீண்ட காலமாக ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் பிரியப்போவதாக வதந்திகள் வந்த நிலையில் இருவரும் ஒன்றாக இந்த நிகழ்விற்கு வந்து இருந்தனர். பின்னர் அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் இணைந்தார். இது தொடறப்பான வீடியோக்களில், அபிஷேக் பச்சன் உள்ளே நுழையும் போது ஐஸ்வர்யாவின் கையைப் பிடித்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா அமிதாப்பின் அருகில் இருப்பதும் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ அவர்கள் பிரிவு குறித்தான வதந்திக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
ஷாருக்கானுடன் கௌரி, சுஹானா
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் அவரது மனைவி கௌரி மற்றும் மக்கள் சுஹானா ஆகியோருடன் வந்து இருந்தார். மற்றொரு வீடியோவில், ஷாருக் பள்ளி குழந்தைகளுடன் நடனமாடினார். ஷாருக் மற்றும் கௌரி ஆகியோர் தங்கள் மகள் சுஹானா கானுடன் பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சுஹானா கருப்பு நிற ஆடை அணிந்திருந்தார். ஷாருக்கான் நீல நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட்டில் காணப்பட்டார். கௌரி வெள்ளை நிற சூட் அணிந்திருந்தார். பாலிவுட் நட்சத்திரங்கள் நிறைந்த இந்த பள்ளி நிகழ்வில் ஷாஹித் கபூர், மீரா ராஜ்புத், கரீனா கபூர், சைஃப் அலி கான், கரிஷ்மா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா டிசோசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: 2 படத்தில் நடித்து இருந்தார். அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அபிஷேக் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்கார் இயக்கிய ஐ வாண்ட் டு டாக் படத்தில் நடித்தார். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சுஜோய் கோஷ் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் அவரது மகள் சுஹானா கானும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடான முஃபாசா: தி லயன் கிங்கின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது இன்று (டிசம்பர் 20) இந்திய திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஷாருக்கானும், ஐஸ்வர்யாவும் இணைந்து பல படங்களில் நடித்தனர். அவர்கள் மொஹபத்தீன் மற்றும் ஜோஷ் (2000), ஹம் தும்ஹாரே ஹைன் சனம் மற்றும் தேவதாஸ் (2002), மற்றும் ஏ தில் ஹை முஷ்கில் (2016) ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தனர்.
டாபிக்ஸ்