தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shah Rukh Khan: ‘மகளின் பிறந்தநாளிலா இப்படி நடக்கணும்’ - ஷாருக்கான் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!-பதறும் பாலிவுட்!

Shah Rukh Khan: ‘மகளின் பிறந்தநாளிலா இப்படி நடக்கணும்’ - ஷாருக்கான் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!-பதறும் பாலிவுட்!

Kalyani Pandiyan S HT Tamil
May 22, 2024 08:40 PM IST

Shah Rukh Khan: அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை காணச் சென்ற நடிகர் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கௌரி கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர்.

Shah Rukh Khan:  ‘மகளின் பிறந்தநாளிலா இப்படி நடக்கணும்’ - ஷாருக்கான் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!-பதறும் பாலிவுட்!
Shah Rukh Khan: ‘மகளின் பிறந்தநாளிலா இப்படி நடக்கணும்’ - ஷாருக்கான் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!-பதறும் பாலிவுட்! (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக்: 

இதுகுறித்து அகமதாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் கூறுகையில், "நடிகர் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது கேடி மல்டி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.” என்று பேசினார். 

நடிகர் ஷாருக்கான் கடந்த செவ்வாய் கிழமை தன்னுடைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக, அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு சென்றார். அவருடன், அவரது மகளான சுஹானா, மகன் ஆப்ராம் ஆகியோரும் சென்றனர்.   

பதறும் பாலிவுட்

அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியை வென்றது. அந்த வெற்றிக்கு பிறகு, அவர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடினர். சுஹானா இன்று தனது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் மனைவி கெளரிகான், தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

 

ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் ஷாருக்கை மருத்துமனைக்கு சென்று சந்தித்து விட்டு திரும்பினர்.

 

செவ்வாய்க்கிழமை போட்டிக்குப் பிறகு, ஷாருக், சுஹானா மற்றும் ஆப்ராம் ஆகியோர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தைச் சுற்றி ரசிகர்களை வரவேற்றனர். அப்போது தவறுதலாக, ஜியோ சினிமாவின் ஐபிஎல் 2024 இந்தி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் குறுக்கிட்டு விட்டனர். 

இதனையடுத்து சடாரென்று சுதாரித்துக்கொண்ட ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த ஆகாஷ் சோப்ரா, பார்த்திவ் படேல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு அவர்களை கட்டிப்பிடித்து சென்றார். அதன் பின்னர் தன்னுடைய மகளையும், மகனையும் அவர் கைப்பிடித்து மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

கடந்த வருடம் ஷாருக்கானின் நடிப்பில் பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்குமே ஷாருக்கான் உடலளவில் அதிகமான உழைப்பை போட வேண்டி இருந்த காரணத்தால், அவர் தொடர்ச்சியாக வேலை செய்தார். இந்த நிலையில், அதிலிருந்து பிரேக் எடுத்திருக்கும் ஷாருக்கான், தற்போது ஐபிஎல் போட்டியில் தன்னுடைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்களால் ஓய்வு தேவை:

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று உணர்ந்தேன். கடந்த ஆண்டு மூன்று படங்களில் நடித்தேன். மூன்று திரைப்படங்ளுமே அதிகமான உடல் உழைப்பை கோரியது.

நான் கிரிக்கெட் வீரர்களிடம் அவர்களின் போட்டிகளுக்கு வருவேன் என்று கூறினேன். அதிர்ஷ்டவசமாக, ஆகஸ்ட் வரை எனது அடுத்த படப்பிடிப்பிலும் நான் கலந்து கொள்ள வில்லை, ஜூன் மாதத்தில் அடுத்தப்படத்திற்கான வேலைகளை திட்டமிடுகிறோம். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்