Serials TRP: சிங்கப்பெண்ணே சீரியலுக்கு விழுந்த பெரிய அடி.. டி.ஆர்.பியில் அடித்து மேலே வந்த சீரியல் என்ன?
Serials TRP: டி.ஆர்.பியில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த சீரியல்கள் அனைத்து சன் தொலைக்காட்சியை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Serials TRP: தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கு ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் தொடர்ந்து பல வீடுகளில் ஒடுகிறது. கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ..
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் சிறகடிக்க ஆசை ஒன்று. சீரியல் தொடங்கிய நாள் முதல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தற்பொது இதன் விளைவாக இந்த வாரம் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து உள்ளது. 8.38 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
சிங்கப்பெண்ணே
கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த பெண், குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஆனந்தி. வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த வார டிஆர்பியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் 8.27 டிஆர்பி புள்ளிகள் பெற்று உள்ளது.